2.0

38

கோலிவுட்டின் அடுத்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு இயக்குனர் ஷங்கரின் 2.0.  பரபரப்பாக இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நாளை முதல் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்குகிறது.

அதிர வைக்கும் சண்டை காட்சி ஒன்றில் நடிகர் அக்சய் குமாரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பங்கேற்கின்றனர். 21 நாட்கள் நடைபெறும் இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் முக்கியமான VFX காட்சிகளும் படமாக்க இருப்பதாக 2.0 குழுவினர் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து பாடலுக்காக ஏதேனும் வெளிநாடு செல்லலாம் என கூறப்படுகிறது.