அதிமுக வேட்பாளர்கள்

318

மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ஏ.டபிள்யூ. ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ல் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. மே 31-ம் தேதி கடைசி நாளாகும்.

திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோ வன் ஆகியோர் வேட்பாளர்க ளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களின் பெயர்களை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

‘நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஏ.நவநீதகிருஷ் ணன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வைத்தி லிங்கம், கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஏ.விஜயகுமார், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிடுவர்’ என தெரிவித்துள்ளார்.

அகம்