அகம் பாப்கார்ன் – ஹே ராம்-5

454
Hey-Ram-Movie-Review

 ராம்  திரும்ப வந்துவிட்டதாக மைதிலி ஃபோனில் தன் தாயிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ராமின் தோற்றமே மாறிவிட்டதாகச் சொல்கிறாள். ஆம் ராம் முற்றிலும் மாறியிருக்கிறான். மைதிலி சொன்னதைப் போல பாரதியார் மீசையுடன் காக்கி பேண்டும் வெள்ளை சட்டையுமாக ஆர்.எஸ்.எஸ் அடையாளங்களைச் சுமந்துக் கொண்டு இருக்கிறான். இங்கு ராமின் குணாதிசயம் பாரதியின் குணத்துடன் ஒத்துப் போகிறது. தன் மனைவியை தொடக்கத்தில் பெரிதாக மதிக்காத பாரதி மெல்ல அவளின் அருமை அறிந்து அவள் மூலமாக ஒரு சமூகத்தைப் பார்த்தான். பெண் விடுதலையின் விதையாக இருந்தவள் செல்லம்மா. மைதிலி தன்னருகில் வருவதற்கு தயங்குவதை உணரும் ராம் மைதிலியிடம் தன் செய்கைக்கு மன்னிப்புக் கேட்கிறான். மைதிலியும் ராம் சிறுவயதிலே அம்மாவை இழந்துவிட்டதை குறித்துக் கவலை தெரிவிக்கிறாள். அபர்ணா இறப்பு குறித்தும் பேசுகிறாள்.

raam mythili interactionராம் அபர்ணா வரைந்த காளி ஓவியத்தைக் காண்பிக்க பதிலுக்கு மைதிலி தான் வரைந்த ஆண்டாள் ஓவியத்தை காண்பிக்கிறாள். இங்கு ஒரு அழகான முரண் இருக்கிறது. ஆண்டாள் காலம் முழுதும் கண்ணன் மீது காதல் கொண்டு வாழ்ந்தவள். காளி மரணத்தின் குறியீடு. அதைக் கொண்டு அவ்விரு பெண்களின் குணாதிசயங்களை விவரிக்கிறார் இயக்குனர். நீண்ட காலம் கழித்து முதன் முதலாக ராம் முகத்தில் புன்னகையைப் பார்க்கிறாள். ஒரு குழந்தையைப் போல அவன் மூன்று முறை சிரித்ததை ரசிக்கிறாள். ராம் முதன் முதலாக மைதிலியை மிக அருகில் பார்க்கிறான். அவனால் அவளுடைய கண்களை சந்திக்க முடியாது அவளுடைய கால்களைப் பார்க்க அவள் காலில் அணிந்திருக்கும் மெட்டி அவனுக்கு அபர்ணாவை நினைவூட்டுகிறது. அவளைக் காதலோடு கட்டியணைக்கும் வேளையில் ராமின் மாமா பாஷ்யம் வந்து மன்னார்குடியில் இருந்து ஜோசியர் ராமை பார்க்க வந்திருப்பதாக கூறுகிறார். ராம் கேள்வியுடன் கீழே வருகிறான்.

raam angry over josiyarஜோசியர் சார் ராமின் ஜாதகத்தை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறார். ராம் தன் ஜாதகத்தை எதற்கு இப்போது பார்க்கிறார் என்று கேட்க அவன் மொஹஞ்சதாரோவில் எலும்புக் குவியல்களுக்கு நடுவேயும் மண்டை ஓடுகளையும் தொட்டதால் அவனுக்கு பேய் பிடித்து புத்தி சுவாதீனமற்று இருப்பதாக சொல்லக் கேட்ட ராம் கடும் கோபமடைகிறான். ஆக எல்லோருமாகச் சேர்ந்து தனக்கு புத்தி சுவாதீனமில்லை என்று முடிவு கட்டிவிட்டதாகச் சொல்லிவிட்டு ஜோசியரை வீட்டை விட்டு வெளியேறுமாறு சொல்லிவிட்டு வேகமாக மேலே வருகிறான். தன் பெட்டியில் துணிமணிகளை அடுக்கிக் கொண்டு இருக்கும்போது மைதிலி வந்து அவன் எங்கு செல்வதாக இருந்தாலும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லிவிட்டு செல்லுமாறு சொல்கிறாள். ராம் அதற்கு தான் தனியாகச் செல்லவில்லை என்றும் மைதிலியை உடன் அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு அவளை தயாராகும்படிச் சொல்லிவிட்டு வெளியேறுகிறான். மைதிலியும் சந்தோஷமாக துள்ளிக் குதித்துக் கிளம்புகிறாள்.

raam mythili leaves to mumbaiமைதிலியின் வீட்டாருக்கு மைதிலியை ராமுடன் அனுப்புவதில் உடன்பாடில்லை. மைதிலியின் அம்மா மட்டும் கணவன் மனைவி விஷயத்தில் நாம் தலையிடக் கூடாது என்று சொல்கிறாள். காரில் கிளம்பும் முன் வசந்தா அக்கா சைகையில் ஏதோ சொல்ல மைதிலியின் அம்மா அதை புரியவைக்கிறாள். மைதிலி கிளம்பும் முன் பாஷ்யம் மாமாவை நமஸ்கரித்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு வருகிறாள். பாஷ்யம் மைதிலியிடம் எதற்கும் கவலைப்பட வேண்டாமென கூறிவிட்டு அவர்கள் எக்மோர் செல்வதாக இருந்தால் ஒன்று எனவும் சென்ட்ரல் என்றால் இரண்டு எனவும் காருக்கு வெளியே கை காட்டச் சொல்கிறார். மைதிலியும் சரியென சொல்லிவிட்டு காரில் ஏறி ராமிடம் ”நம்ம எக்மோர் போறோமா? இல்ல சென்ட்ரல் போறோமா?” எனக் கேட்க ராம் தான் நான்காவது முறை சிரித்ததை கவனிக்கவில்லையா என்று கேட்க கார் புழுதி பறக்க தெருவில் விரைகிறது.

ராமும் மைதிலியும் விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராம் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க மைதிலி அது குறித்துக் கேட்கிறாள். அதற்கு ராம் “Somethings are better done undercover” என்று கூறுகிறான். அதற்கு மைதிலி மகாத்மா எதையும் மூடி மறைப்பது தப்பு என்கிறாரே என்று கேட்க ராம் அதற்கு மூடி மறைத்தாலும் உன் ப்ளவுஸ் நன்னாயிருக்கு என்றவுடன் மைதிலி மகாத்மா பேச்சையும் செயலையும் குறித்துச் சொன்னதாக சொல்கிறாள். அதற்கு ராம் மைதிலி கையில் உள்ள The Hindustan Times Weekly பத்திரிக்கையில்raam points out gandhi “Protect Muslims in India and then alone would I go to Pakistan to protect the Hindus” என்று கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டி “அவரோட இந்த பேச்சப் பத்தி என்ன நினைக்கிறே?” என்று கேட்க அதற்கு மைதிலி மகாத்மாவின் எல்லா செயலுக்கும் பேச்சுக்கும் பின்னே ஒரு நியாயம் இருக்கும் என்று கூறியவுடன் ராம் காந்தியை கடுமையாகச் சாடுகிறான்.

ராம் மைதிலியுடனான ideological conflict வெளிப்படும் காட்சி அது. ராம் மைதிலியிடம், “அந்த பெரியவர சுத்தி மூணு விதமான குரங்குகள் இருக்கு.. ஒண்ணு மகாத்மா சொல்றத தவிர வேற எதையும் கேக்க மாட்டேங்கறது… இன்னொன்னு மகாத்மாவுக்கு எதிர்வாதம் பேச மாட்டேன்னு வாய பொத்திண்டுருத்து… மூணாவது ஒலக நடப்ப பாக்காம கண்ண மூடிண்டு காந்தியோட கற்பனை லோகத்துல இருக்கு… இதுல நீ எந்த மாதிரி குரங்கு? எனக் கேட்க மைதிலி அதற்கு அவள், “மகாத்மாவ சுத்தி பல குரங்குகள் அரசியல் ஆதாயத்துக்காக இருக்குகள்…அதுல நீங்க சொன்ன மாதிரி குரங்குகளும் இருக்கலாம். நான் மகாத்மாவோட பொம்ம குரங்கு மாதிரி… தீயவைகள மட்டும் தான் கேக்க, பாக்க, பேச மாட்டேன்… நல்லதுக்காக என்னோட அந்த மூணு புலன்களும் திறந்தே இருக்கும்” என்று திடமாக பதிலளிக்கிறாள். அவளுடைய பதிலை மெச்சிய ராம் அவளுக்கு வீரசவர்க்காரின் புத்தகத்தை படிக்க கொடுக்கிறான். அதற்கு மைதிலி, “I hate semi-fiction” என்று கூறுகிறாள். இது ஒரு விதமான tit-for-tat பதில். முதலிரவு அறையில் ராம் மகாத்மா காந்தியின் சுயசரிதையை “I hate biographies” என்று சொன்னதற்கு மைதிலி சொல்லும் பதில் இது. ராம் “Touche” என்று சொல்லிவிட்டு வீரசவர்க்காரின் மராட்டிய கவிதைப் புத்தகத்தை படிக்கத் தருகிறான்.

பம்பாய் விமான நிலையத்தில் தன்னுடைய உடைமகளை வாங்கும் வேளையில் ராமின் தோளில் ஒரு கை விழுகிறது. அபயங்கர். இந்த முறை அவனுடைய தோற்றமும் முற்றிலும் வேறாகத் தெரிகிறது. ராம் மைதிலியிடம் “அபயங்கர்” என்று அறிமுகம் செய்யும்போது அபயங்கர் தன்னை ராமகிருஷ்ண பாண்டே என அறிமுகம் செய்துக் கொள்கிறான். ராம் மைதிலியை மனைவி என அறிமுகம் செய்து வைக்க அதற்கு அபயங்கர் “ஏன்?” என கேட்க அதிலிருந்து ராம் திருமண பந்தத்தில் புகுந்தது அவனுக்கு விருப்பமில்லை என தெரிகிறது. அபயங்கர் மைதிலிக்கு வணக்கம் செலுத்திவிட்டு பெட்டியைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான். அப்போது நாளை ராஜாவுடன் வேட்டைக்குச் செல்லவிருப்பதாகவும் அவளுக்கு உabahyankar replies mythiliடன் வர விருப்பமா என்று கேட்கிறான். அப்போது வேட்டை குறித்த ஒரு உரையாடல் நிகழ்கிறது. அப்போது மைதிலி அபயங்கரிடம் “ஒரு ஓநாய் சாப்புடறதுக்கு உங்க கொழந்தைய தூக்கிண்டு போச்சுன்னா அத நியாயம்பேளா?” என்று கேட்க அபயங்கர் சிறிதும் தயங்காமல்
“ஓநாயா இருந்துப் பாத்தா தான் அந்த நியாயம் புரியும்” என்று சொல்கிறான். காந்தி மீது காழ்ப்புக் கொண்ட குழுவினருக்கான justification அது.

மறுநாள் ராஜாவுடன் வேட்டைக்குச் சென்றுவிட்டு ராம், அபயங்கர் மற்றும் சிலர் அவருடைய காரில் திரும்பி வரும்போது ரயில்வே கேட் மூடப்படுகிறது. அபயங்கர் மஹாராஜாவிடம் “நான் வேண்டுமானால் ரயில்வே கேட்டை திறக்க சொல்லட்டுமா?” என்று கேட்பான். அதற்கு மஹாராஜா “l said all the doors now are closed for Rajas like me. So what is the use of opening only this door?” என்று பதிலளிப்பார். சர்தார் வல்லபாய் படேலின் சமஸ்தானங்களை இணைக்கும் கொள்கையின் மேல் கோபம் கொண்ட பல மகாராஜாக்களுள் இவரும் ஒருவர். அந்த வார்த்தைகள் அவரின் இயலாமை மற்றும் கோபத்தின் வெளிப்பாடு… காந்திக்கு எதிராக அவர்கள் செயல்பட இருந்த பல காரணங்களுள் இதுவும் ஒன்று.

அதனை தொடர்ந்து ராஜா “ராம் (சாகேத் ராம் திரும்புவார்)…அவர் அபயங்கரைச் சுட்டிக் காட்டி “அந்த பாப்பட் வாலாவை வரச்சொல்” என்பார்.அபயங்கர் “மஹாராஜா..பாப்பட் ஏழைகளின் உணவு அல்லவா?” என்றதற்கு ராஜா “வல்லபாய் அரசில் ராஜாக்கள் பாப்பட் தின்று பழகி கொள்ள வேண்டும்” என்பார். இது ஒரு விதமான அரசியல் பகடி. எப்படியும் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு தாங்களும் ஒரு பொதுப்பிரஜையாக ஆகிவிடும் நாள் தொலைதூரத்தில் இல்லை என்பதை உணர்ந்து வெளிப்படும் வார்த்தை.

பாப்பட் வாலாவை அபயங்கர் அழைக்க அவர் வந்து இவர்களுக்கு பாப்பட் கொடுத்தவுடன் ராஜா சில ரூபாய்களை அவரிடம் கொடுப்பார். கொடுக்கும் போது “இவ்வளவு பணத்தை எவன் எப்படி எண்ணுவானோ?” என்று சொல்லும்போது “கவலைப்படாதீர்கள் மஹாராஜா அதை தான் நான் கராச்சியில் செய்து கொண்டிருந்தேன்” என்று பாப்பட் வாலா பதிலளிப்பான்… அதுவரை எதையும் கவனிக்காமல் இருக்கும் ராம் சட்டென திரும்பி “லால்வாணி…” என்பார். மகாராஜாவிடம் ”இவர் லால்வாணி என் பழைய சிநேகிதர்…ஒரு பெரிய தொழிலதிபர்” என்று கூறுவார்…

raam lalwani meetsராம் லால்வாணியிடம் அவருடைய குடும்பம் குறித்து விசாரிக்கும் போது லால்வாணி கராச்சியில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் தன் மனைவி மானமிழந்து உயிர் விட்டதாகவும் பிள்ளைகளையும் இழந்து விட்டதாகவும் சொல்கிறார். இதன் மூலம் கராச்சியில் இந்துக்கள் மீதான வன்முறை குறித்த வரலாறு சொல்லப்படுகிறது. லால்வாணி அப்போது ”உனக்கு இதெல்லாம் புரியாது ராம் நீ ஒரு தென்னிந்தியன்” என்பார்…அப்போது ராம் அழுகையை அடக்கி கொண்டு “எனக்கும் புரியும்..” என்பார். அது அபர்ணாவை மீண்டும் ராமிற்கு நினைவுப்படுத்தும் காட்சி. மிகுந்த நெகிழ்வான காட்சி அது…
அதே போல் இந்த காட்சியின் தொடக்கத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டதும் நாம் அது முதல் ரயிலை எதிர்பார்க்க தொடங்கி விடுவோம்…அதுவும் பழைய கால நீராவி என்ஜின் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன். சரியாக ரயிலின் ஓசை அருகில் வருகையில் ராம் லால்வாணியை தழுவிக் கொள்ள ரயில் கடப்பதை ஒலிகளின் மூலம் இயக்குனர் கமல் ஏற்படுத்துவார்.

பாலாஜி பாலசுப்ரமணியன்