அகம் ஜோதிடம் – வார ராசிபலன்

74
unique-about-your-zodiac
      சூரி

சுக் புத

கேது இந்த வார கிரக நிலை.

 

04.07.16 முதல் 10.07.16 வரை.

 

 
  ராகு

குரு

  சனி செவ்  

வார இராசி பலன்

மேஷம் : அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் வரையான மேஷ ராசியினருக்கு, இந்த வாரம் உற்சாகமாய் துவங்கும், வருமானம் திருப்திகரமாக இருக்கும். பொன்பொருள் சேர்க்கை உண்டு. அரசால் ஆதாயம் உண்டு. தொழில் அமோகமாக நடைபெறும். தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களோடு வாக்குவாதத்தை தவிர்க்கவும். வேலை பளு கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வருமானமும் செலவும் சரிசமமாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்து நீங்கும்.

ரிஷபம் : கிருத்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம் கொண்ட ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாகவே இருக்கும். தொழில் பரபரப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளருக்காக அதிகப்படியான வேலையை செய்ய வேண்டி இருக்கலாம். லாபம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கும். உயரதிகாரிகளிடம் வாக்குவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனை இருந்தாலும் மனைவியால் உதவிகள் கிடைக்கப்பெறலாம். கல்வி, ஆபரணம் போன்ற செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியமாகவே இருக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் வரையான மிதுன ராசியினருக்கு, இந்த வாரம் சுமாரான வாரம் தான். வேலைப் பளு அதிகரிக்கும். உயரதிகரிகளால் பிரச்சனையும், உடன் வேலைப் பார்ப்பவர்களால் உபத்திரமும், வேலையை விரைந்து முடிக்க முடியாத வண்ணம் சோம்பலும் கூடும். தொழில் புரிபவர்கள் வாடிக்கையாளர்களிடம் நல்லப் பெயர் எடுக்க அதிகம் உழைக்க வேண்டும். செய்த வேலையை திரும்ப செய்யும் சூழல் ஏற்படும். வருமானத்திற்கு குறைவில்லை. ஆனால் மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். கடன் பிரச்சனை மனதை வாட்டும். புதியக் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். சகோதர்களிடம் சண்டைகள் ஏற்படலாம்.

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களை கொண்ட கடகராசியினருக்கு, இந்த வாரம் சற்று குழப்பமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனம் தேவை. செய்த வேலையில் இருக்கும் குறைகளால் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க நேரிடும். மேலதிகாரிகள் பற்றியோ, சக ஊழியர்கள் பற்றியோ எதுவும் பேசாமல் இருப்பது பிரச்சனை ஏற்படா வண்ணம் பாதுகாக்கப்படும். சுயதொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும், பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். வருமானம் அதிகரிக்கும். லாபம் திருப்திகனமானதாக இருக்கும். கண் நோய் கண்ணில் எரிச்சல் வந்து நீங்கும். குடும்பம் அமைதியாக இருக்கும். தாய் வழி உறவுகளோடு இணக்கம் ஏற்படும்.

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் வரையிலான சிம்ம ராசியினருக்கு, இந்த வாரம் மகிழ்ச்சியாவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியோடு இருப்பார்கள். வேலையில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். சுய தொழிலில் வேலைப்பளுகூடும். வியாபாரம் அமோகமாக நடைபெறும். வருமானம் பெருகும். ஓய்வின்றி உழைக்கும் சூழல் ஏற்படும். குடும்பம் சீராக நடைபெறும். நீண்ட காலமாக வராமல் இருந்த உறவினர் வருகை ஏற்படலாம். சிறு சிறு செலவுகள் கூடும். உடலும் மனமும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம் வரையிலான கன்னிராசியினருக்கு, இந்த வாரம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியரின் வேலையை சேர்த்து செய்யும் சூழல் ஏற்ப்பட்டாலும், மகிழ்ச்சியாகவே இருக்கும். சுயதொழில் சுறுசுறுப்பாக நடைபெறும். லாபம் குறைவாகவே இருந்தாலும், வியாபாரம் அமோகமாக நடைபெறும்.  பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சிறு சிறு கடன் தொல்லைகள் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

துலாம் : சித்திரை 3,4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் வரையிலான துலாம் ராசியினருக்கு, இந்த வாரம் மகிழ்ச்சியான மனநிலையிலேயே நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். ஆடை ஆபரண வகையில் செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியரின் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது. சொந்த தொழில் செய்பவர்கள் ஊழியர்களை நம்பாமல் தாமே முன்னின்று செய்வது நல்லது. இல்லையேல் வாடிக்கையாளரிடம் கெட்டப் பெயர் ஏற்படலாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை. வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். வெளியூர் அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும்.

விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை வரையிலான விருச்சிக ராசியினருக்கு, இந்த வாரம் துவக்கமே சந்திராஸ்டமத்தில் ஆரம்பிப்பதால் ஒரு வித குழப்பமான மனநிலையாகவே இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். வார பிற்பகுதியில் உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கப்பெறலாம். சுயதொழில் லாபம் தருவதாக இருக்கும். கூட்டுத் தொழிலும் நன்கு நடைபெறும். எதிர்பாராத லாபம், முன்னேற்றம் இருக்கும். எல்லோரிடத்திலும் நன்மதிப்பு கிடைக்கப்பெறும். குடும்பம் சுகமாக இருக்கும். வீட்டுக்கு தேவையான ஏதாவது விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

தனுசு : மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரையிலான தனுசு ராசியினருக்கு இந்த வாரம் நலமாகவே இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். வேலையில் பாராட்டுகிடைக்கும். வாக்குவாதம் தவிர்க்கவும். சொந்த தொழில் எதிர்ப்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறலாம். புதிய வாடிக்கையாளர் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத் தொழில் நல்லவிதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சேர்க்கை ஏற்படும். லாபகரமாக திருப்திகரமான நிம்மதி இருக்கும். செவ்வாய் பகல் 11.45 முதல் வியாழன் மாலை 5.13 வரை சந்திராஷ்டமம் இருக்கும் எதிலும் கவனம் தேவை.

மகரம் : உத்திராடம் 2, 3, 4ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 1, 2 வரையிலான மகர ராசியினருக்கு, இந்த வாரம் மகிழ்ச்சியான மனநிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரவை அலுவலகம் மூலமே கிடைக்கப் பெறுவீர். அலுவலகில் விவாதம் தவிர்க்கவும். சொந்த தொழில் லாபம் அதிகரிக்கும். ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத் தொழில் நன்கு நடைபெறும். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனை காணப்படும். கடன்கள் அடைபடும், குடும்பத்தினர் எதிர்பார்க்கும் பொருட்களை வாங்கித்தருவீர்கள். வியாழன் மாலை 5.15 மணியிலிருந்து ஞாயிறு மதியம் வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை.

கும்பம் : அவிட்டம் 3,4ம் பாதம் முதல் சதயம், பூராட்டாதி 1ம் பாதம் வரையிலான கும்ப ராசியினருக்கு, இது மிகவும் உகந்த வாரம். இந்த வாரம் முழுவதுமே மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான வேலையை சுலபமாக செய்து முடிப்பீர். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறும். உங்களது வேலையை பிறர் பங்கிட்டுக்கொள்வார்கள். சொந்த தொழிலில் வேலைகள் அதிகமாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும். லாபமும் அதிகமாகும். கூட்டுத்தொழில் சுமாராகவே நடைபெறும். சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் குடும்பம் மகிழ்ச்சியாகவே இருக்கும். ஞாயிறு மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்குவாதம் தவிர்ப்பது உத்தமம்.

மீனம் : பூரட்டாதி 2,3,4 ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரையான மீன ராசியினர் இந்த வாரம் சுமாரான வாரம். உத்தியோகத்தில் வேலை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சொந்த தொழில் ஆதாயம் அளிக்கும். எதிர்பார்க்கும் பணம் வந்து சேரும். கூட்டுத்தொழில் லாபம் அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். குடும்பம் சீராகவே இருக்கும். சிலருக்கு வாரக் கடைசியில் வெளியூர் பிரயாணம் வாய்ப்பு உண்டு. குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆடை அணிகலன் சேர்க்கை உண்டு. சிலர் கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.

-”அறிவியல் ஜோதிட ரத்னா” செந்தில்குமார் M.A.(astro)