அதிமுக பிரச்சாரம் செய்ய ஆதீனம் விருப்பம்

57

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக மதுரை ஆதீனம் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பேசினார். சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா அழைத்தால் பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்தார்..

இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மதுரை ஆதீனத்தை அவரது மடத்தில் சென்று சந்தித்து, அவரிடம் அமைச்சர் ஆசி பெற்றார். அமைச்சர் செல்லூர் கே.ராஜு விடம் ஆதீனம் சந்திப்பு குறித்து கருத்து கேட்ட போது, இப்போதுள்ள சூழலில் தான் எதுவும் பேச முடியாது என மறுத்துவிட்டார்.

மதுரை ஆதீனத்திடம் கேட்டபோது, ‘சட்டப்பே ரவைத் தேர்தலையொட்டி அமைச்சர் தன்னிடம் ஆசி பெற வந்தார். தேர்தலில் அதி முகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஆவலாக இருக்கிறேன். அதிமுக தலைமைக்கழகம் அழைத்தால் பிரச்சாரத்துக்கு புறப்படத் தயார்’ என்றார்.

அகம்