பிரிட்டன் வெளியேறுகிறது

127

பெரும்பான்மையான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், வாக்களித்தவர்களில் 52 சதவீதத்தினர் , பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற தரப்பு லண்டனிலும், ஸ்காட்லாந்திலும் பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் , ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகவேண்டும் என்ற தரப்புக்கே ஆதரவு கிடைத்திருக்கிறது.

பிரிட்டன் இப்போது முன்பு பயணிக்காத பாதையில் செல்கிறது என்று பிரதமர் டேவிட் கேமரனுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தக் கருத்துக் கணிப்பின் தாக்கம் பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் அதற்கப்பாலும், இன்னும் சற்று காலத்துக்கு, பெரும் அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். இன்று ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்கு சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன.

அகம்