இரத்த தானமும் பதின்பருவ புரிதலும்

137

வழக்கமா வகுப்புக்கு போகுறப்ப முக்கியமான விசயங்களை மட்டுமே குறிப்பெடுத்துக்கிட்டு அது சார்ந்த பிற விசயங்களை மாணவர்களோட சேர்ந்து கலந்துரையாடுறது என்னோட வழக்கம். அப்படி தான் ஒரு நாள் இளநிலை மாணவர்களுக்கு இரத்தமும் அதன் வகைகளும் பற்றி வகுப்பெடுக்க வேண்டி  இருந்துச்சு.

போன உடனே அவங்களுக்கு ஒரு வணக்கத்த சொல்லிட்டு, இரத்தத்தோட வகைகள் என்னென்ன, அதை எப்படி கண்டுபிடிக்குறதுன்னு முதல்ல ஆரம்பிச்சேன்.

அதாவது, இரத்த வகைகள்ல ‘ஏ’, ‘பி’, ‘ஏபி’ அப்புறம் ‘ஓ’ வகைகள் உண்டுன்னும், இந்த இரத்த வகைகள எப்படி கண்டறியலாம்னா, நம்ம இரத்த சிகப்பணுக்கள்ல இருக்குற ஆன்டிஜன வச்சு கண்டறியலாம்னு சொன்னேன். ‘ஏ’ வகை ப்ளட் குரூப்னா சிகப்பணுக்கள்ல ‘ஏ’ ஆன்டிஜன் இருக்கும்னும், பிளாஸ்மால ‘பி’ ஆன்டிபாடி இருக்கும்ன்னும், ‘பி’னா அதுல ‘பி’ ஆன்டிஜனும் ‘ஏ’ ஆன்டிபாடியும் இருக்கும்ன்னு விளக்கிட்டே இருந்தேன். ‘ஏபி’ ரெத்தவகைக்கு சிகப்பணுக்கள்ல ‘ஏ’, ‘பி’ ரெண்டு ஆன்டிஜன்களும் இருக்கும்னும், அதுவே ‘ஓ’ வகை இரத்தத்துல எந்த ஆன்டிஜனும் இருக்காதுன்னும் சொன்னேன். தெளிவா சொல்லணும்னா இந்தா இந்த அட்டவணைய பாத்துக்கோங்க.

இரத்த வகை சிகப்பணுவில் இருக்கும் ஆன்டிஜன் பிளாஸ்மாவில் இருக்கும் ஆன்டிபாடி
‘ஏ’ ‘ஏ’ ‘பி’
‘பி’ ‘பி’ ‘ஏ’
‘ஏபி’ ‘ஏ’ மற்றும் ‘பி’ இல்லை
‘ஓ’ இல்லை ‘ஏ’ மற்றும் ‘பி’

சரி இந்த ஆன்டிஜன், ஆன்டிபாடி எல்லாம் ஏன் நம்ம இரத்தத்துல இருக்கு? அப்படியே இரத்த தானம், யார் யாருக்கு இரத்தம் குடுக்கலாம், யார் யாருக்கு இரத்தம் கொடுக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு வந்தேன்.

இப்போ இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எடுத்துப்போம். ரெண்டு நாட்டுக்கும் சண்டை. இந்தியாவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் எதிரி, அவங்களுக்கு இந்திய வீரர்கள் எதிரி. அதே நேரம் இந்தியாவுக்கு இந்திய வீர்கள் சொந்தநாட்டு வீரர்கள் இல்லையா?

அப்படி தான் “ஏ” இரத்த வகைல இருக்குற “ஏ” ஆன்டிஜன் “பி” இரத்த வகைகாரர்களுக்கு எதிரி. “ஏ” வகை இரத்தத்தை “பி”வகை இரத்தப்பிரிவு உள்ளவங்களுக்கு செலுத்தினா, அவங்க உடம்புல இருக்குற “ஏ” ஆன்டிபாடி “ஏ” ஆன்டிஜன அழிச்சிடும்னு சொன்னேன்.

அப்படியே தொடர்ந்து, அதனால அந்தந்த வகைய சார்ந்தவங்க அந்தந்த வகை உள்ளவங்களுக்கு தான் இரத்த தானம் பண்ண  முடியும்னு சொன்னேன்.

‘ஏ’ வகை இரத்தம் உள்ளவங்கனா அவங்க ‘ஏ’ வகை இரத்தம் உள்ளவங்களுக்கு  தான் இரத்த தானம் பண்ண முடியும்னும், “பி” வகை இரத்தம் உள்ளவங்கனா அவங்க “பி” வகை இரத்தம் உள்ளவங்களுக்கு தான் இரத்த தானம் பண்ண முடியும்னும் சொன்னேன்.

அப்புறம் எப்படி மேடம் “ஓ” வகையை எல்லாருக்கும் தானம் குடுக்கலாம்னும், “ஏபி” வகையை எல்லார்கிட்ட இருந்தும் குருதி கொடை பெறலாம்னும் சொல்றாங்கன்னு ஒருத்தன் புத்திசாலித் தனமா கேள்விக் கேட்டான்.

நாம ஏன் “ஓ” வகையை  அப்படி சொல்றோம்னா அதுல எந்த விதமான ஆன்டிஜனும் இல்ல. அதனால அத எதிர்த்து போராட எந்த இரத்த வகைக்கும் அவசியம் இல்லன்னு சொன்னேன். அதே மாதிரி :ஏ.பி” இரத்த வகைல ஏற்கனவே “ஏ”, “பி” ஆன்டிஜன் இருக்குறதால எந்த இரத்தம் குடுத்தாலும் பிரச்சனை இல்லைன்னு சொன்னேன். இதுலேயே, பாசிட்டிவ் நெகடிவ் வகைகள் பத்தியும் பேச ஆரம்பிச்சேன்.

முடிஞ்சா இந்த அட்டவணையை பாத்து யார் யாருக்கு இரத்தம் குடுக்கலாம், யார் யாருக்கு குடுக்க கூடாதுன்னு தெரிஞ்சிக்கோங்க.

பெற்றுக் கொள்பவர் தானம் கொடுப்பவர்
O+ O- A+ A- B+ B- AB+ AB-
O+
O-
A+
A-
B+
B-
AB+
AB-

√  குடுக்கலாம்; – குடுக்கக் கூடாது

இப்படி இரத்த தானம் பத்தின சாதகம், பாதகம் பத்தி அலசிட்டு இருந்தப்ப திடீர்னு “எரித்ரோப்ளாஸ்டாசிஸ் பீட்டாலிஸ்” (Erythroblastosis Fetalis) னா என்னன்னு தெரியுமான்னு கேட்டேன். பசங்களும் சரி பொண்ணுங்களும் சரி, முழிச்சாங்க…

சரி, இத எல்லாம் அப்படியே தூக்கி வச்சிடுவோம். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் பேசுறப்ப ஜாதக பொருத்தம் பாக்குறாங்களோ இல்லையோ இரத்த பொருத்தம் பாக்கணும். தெரியுமான்னு கேட்டேன். இல்ல மேடம் தெரியாது, இப்ப தான் இத கேள்வியே படுறோம். கல்யாணம்னா ஜாதகம் தானே பாக்கணும், ஏன் இரத்த பொருத்தம் பாக்கணும்ன்னு ஒரு பொண்ணு கேட்டா.

உடனே ஒரு பையன் எழும்பி, பையனுக்கோ இல்ல பொண்ணுக்கோ எய்ட்ஸ் இல்லைனா வேற ஏதாவது எஸ்.டி.டி நோய்கள் இருந்தா தெரிஞ்சிக்க தான் இரத்த பொருத்தம் பாக்கணும்ன்னு சொன்னான்.

அடேய்!!… அட்வான்சா இருடா, அதுக்காக ஓவர் அட்வான்சா இருக்காத. அதுக்கு இரத்தத்த டெஸ்ட் பண்ணினா போதும். பொருத்தம் எல்லாம் பார்க்க வேணாம்னு சொன்னேன். அட, ஆமாலன்னு பையன் உக்காந்துட்டான்.

நீங்க சொல்லுங்க மேடம், இன்ட்ரஸ்ட்டா இருக்குன்னு பிள்ளைங்க சொல்லவும் நான் ஆரம்பிச்சேன். எரித்ரோப்ளாஸ்டாசிஸ் பீட்டாலிஸ்ங்குறது சிசுக்களுக்கு வர்ற இரத்த அணு சிதைவு நோய் அப்படின்னு. இத “வளரா சிவப்பணு”ன்னும் சொல்லுவாங்க. இந்த நோய் வர சில காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், குழந்தையோட அம்மா அப்பாவோட இரத்த வகைன்னு சொன்னதும் அதெப்படின்னு புள்ளைங்க ஆர்வமாகிட்டாங்க.

நான் தொடர ஆரம்பிச்சேன்.

நம்மோட இரத்த வகைல ஆர்.ஹச் (Rh) பாசிட்டிவ் நெகட்டிவ்னு இரண்டு வகை தெரியும் தானே. (எ.கா: O+, O-), அதுல பொண்ணு Rh நெகடிவ்வா இருந்து பையன் Rh பாசிட்டிவா இருந்தா அவங்களுக்கு பிறக்குற அல்லது பிறக்கப் போற ரெண்டாவது குழந்தைக்கு இந்த பாதிப்பு வரும்.

எப்பவுமே நம்மோட உடம்புல இருக்குற நோய் எதிர்ப்பு சக்திகள் அந்நிய பொருட்கள் நம்ம உடம்புல நுழைஞ்சா அதுக்கு எதிரா போரிடும். ஒரு Rh நெகட்டிவ் வகை பொண்ணுக்கு Rh பாசிட்டிவ் மூலம் உருவாகுற குழந்தை Rh பாசிட்டிவா உருவாக வாய்ப்பு அதிகம். அப்படி ஒரு குழந்தை உருவாகுற பட்சத்துல அந்த குழந்தையோட இரத்த வகை தாய்க்கு அந்நிய பொருள். அத எதிரியா பார்க்குற தாயோட நோய் எதிர்ப்பு சக்தி காரணிகள் குழந்தையோட இரத்தத்துக்கு எதிரா போராட ஆரம்பிச்சிடும். இதனால குழந்தையோட இரத்த அணுக்கள் அழிஞ்சு போய், அபார்சன் நடக்க வாய்ப்புண்டுன்னு சொன்னேன்.

சிம்பிளா சொல்லணும்னா கல்யாணம் பண்ற வயசுல இருக்குற பொம்பள புள்ளைங்க, “ஓ-நெகட்டிவ்” இரத்த வகைய சேர்ந்தவங்களா இருந்தா ஒரு நெகட்டிவ் ஆணை கல்யாணம் பண்ணிக்கலாம். அப்படி இல்லைனா கன்சீவ் ஆறதுக்கு முன்னாலயே நல்ல டாக்டரா பார்த்து குழந்தை ஆரோக்கியமா பிறக்க என்ன பண்ணனும்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம்.

இப்போ அறிவியல் உலகத்துல இதுக்கெல்லாம் ஈசியா தீர்வு இருக்கு. ஆனா இது தெரியாம எத்தனை பேர் குழந்தை அபார்ட் ஆனா காரணமும் தெரியாம, ஹாஸ்பிட்டலும் போகாம இருக்காங்கன்னு சொன்னதும் ஒரு பொண்ணு எழுந்து எங்க பக்கத்து வீட்ல ஒரு பொண்ணுக்கு முதல்ல ஒரு பையன் பிறந்தான். அதுக்கு அப்புறம் தொடர்ந்து அவங்களுக்கு அபார்சன் ஆகிட்டே இருக்கு. அவங்க ஹாஸ்பிட்டல் எல்லாம் போகல மேடம்னு சொன்னாள். இது பத்தி விசாரிக்குறேன்னும் சொல்லியிருக்கா (கிராமங்கள்ல மருத்துவமனை போகாம இருக்குறது இப்பவும் சகஜம் தான்).

பொண்ணுங்கள பெத்த அம்மாவும் அப்பாவும் கூட இத வாசிச்சுட்டு இருப்பீங்க, உங்க பொண்ணோட ரத்த வகை என்னன்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அதுக்கு தகுந்தமாதிரி பையனோ இல்ல டாக்டர் அறிவுரைகளோ கேட்டுக்கலாம்.

இது பேசிட்டு இருக்கும் போதே, கரு எப்படி உருவாகுது, எப்படி பதியுது, அப்போ என்னென்ன பிரச்சனை வருதுன்னு க்ளாஸ் நீண்டுட்டே போச்சு. அப்போ தான் ஒருத்தன் எழுந்து சொன்னான் “நாங்க ஸ்கூல்ல படிக்குரப்பவே இதெல்லாம் உண்டு மேடம். ஆனா யாருமே சொல்லித் தரலன்னு”. சரி, இப்போ பேசுவோம்னு நிறைய விஷயங்கள் பேச ஆரம்பிச்சோம். பிள்ளைங்க கிட்ட பேசிட்டு இருந்தப்ப ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சுது.

தப்புன்னு தான் நினச்சிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அதுல இருக்குற அறிவியல், ஒரு கரு உருவாக உடல்கள்ல நடக்குற மாற்றங்கள், கர்ப்பப்பை பிரச்சனைகள், ஆண்களுக்கு வர்ற பிரச்சனைகள், குடும்ப கட்டுப்பாடு, அதோட அவசியம்ன்னு நீண்டுட்டே போற விஷயம்.

பசங்கள பாத்து கேட்டேன், எத்தனை பேருக்குடா பெண்களோட மென்சஸ் நேர அவஸ்த்தை தெரியும்னு. நிறைய பேர் ஒருத்தர் மூஞ்சை இன்னொருத்தர் பாத்துட்டு தான் இருந்தாங்க. ஒரு பையன் எழுந்து, நிறைய ப்ளீட் ஆகும் மேடம், சில நேரம் தலை சுத்தி கீழ விழுவாங்க. சொல்லவே முடியாத அளவு வயித்த புடிச்சிட்டு கண் எல்லாம் கண்ணீர் நிறைஞ்சு அழுதுட்டு இருப்பாங்க. சில நேரம் நிறைய கோபம் வரும். அத மீறி கண்ணீரும் வரும். தங்கச்சி அப்படி அழுவா மேடம். சில நேரம் அவ உக்காந்து இருக்குற இடம் எல்லாம் இரத்த கறை ஆகிடும். நான் அத கழுவி விட்ருக்கேன். அவளுக்கு சோடா வாங்கி குடுத்துருக்கேன். வேற என்ன பண்ணன்னு தெரியல மேடம். தெரிஞ்சா கண்டிப்பா செய்வேன்னு சொன்னான். அப்படி சொல்லும்போதே அவளுக்கு ஏதாவது செய்ய முடியாதாங்குற ஆதங்கம் தெரிஞ்சுது.

கொஞ்ச நேர மவுனத்துக்கு பிறகு, ஒரு சத்தம் பொண்ணுங்க பக்கத்துல இருந்து வந்துச்சு…

“நீ தான் ஆம்பளடா”

க்ளாஸ் ரூம்ல அத்தன பேரும் கைதட்டிட்டாங்க.

”எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலனாலும் பொண்ணுனா அவ கலரு, அழகுன்னு மட்டும் தெரிஞ்சி வச்சிருக்குற பசங்க மத்தியில அவங்க வலிகளையும் தெரிஞ்சி வச்சிருக்கடா, வர போற பொண்டாட்டிய நீ பத்திரமா பாத்துக்கணும்ன்னு சொன்னேன்.”

“அதுக்கு முன்னால என் அம்மாவையும் தங்கச்சியையும் பத்திரமா பாத்துப்பேன் மேடம்ன்”னு சொன்னான்…

காயத்ரிதேவி