பூமராங் முடிச்சு

186

“என்னை உங்களால் காப்பாற்ற முடியாது. எல்லாமே எனக்கு எதிரா இருக்கு! “என்றான் கம்பிக்குள்ளிருந்த ஜாக்.

“நடந்த உண்மையை சொல்லு.! காப்பாத்த முடியுமா இல்லையான்னு நான் சொல்கிறேன்.!”என்றான் பில்.தனியார் துப்பறிவாளன்.அருகில் அவனது அசிஸ்டெண்ட் டிகோ.

“முதல்ல என்னை பத்தி சொல்லிடுரேன்.நான் ஒரு வைல்டு லைப் போட்டோகிராபர்.!லாரன்ஸும் அதே வேலைதான் பண்ராரு.ஆனா தொழில்ல சீனியர்.விலங்குகளின் எல்லா சுபாவமும் அவருக்கு அத்துபடி! மனிதர்களை ரப் அண்ட் டப்பாகத்தான் ஹேண்டில் பண்ணுவாரு! ஒரு சேனலுக்காக ரெண்டுபேரூம் போலார் கரடியப்பத்தி டாக்குமெண்டரி எடுக்க முடிவாச்சு.ரெண்டு பேரும் அலாஸ்காவில் ஒரு கரடி கூட்டத்தை கண்காணிக்க ஆரம்பிச்சோம்! “

“அப்புறம் எ ன்னாச்சு? “

“முதல்லருந்தே அவருக்கும் எனக்கும் ஒத்து போகலை! ஒயாத வாய்சண்டையா இருந்தது.நான் பொறுத்துப் போக காரணம்.அவரோட விலங்குகளை பற்றிய அறிவு! போலார் கரடி வெள்ளையா இருக்கும்.மூக்கு மட்டும் கருப்பா இருக்கும்.வேட்டையாடும்போது கையால் மூக்கை பொத்திக்கும்.அப்போது அதை பனியில் அடையாளம் காணமுடியாது.அதோட கால் நகத்துல பாக்டீரியா, சேறு, அழுகிய மாமிசமெல்லாம் இருக்கும்.அதுல தாக்குனா செப்டிக் ஆகி மரணம்தான்.இதெல்லாம் லாரன்ஸ் சொல்லி நான் தெரிஞ்சுகிட்ட விசயங்கள்! அவரோட அறிவுக்கு நான் அடங்கி போக வேண்டியிருந்தது.!”

“அப்புறம் எப்படி செத்தாரு? “

“எங்களுக்கு ஒரு கயிறு தேவைப்பட்டுது.அதை மரத்திலிருந்து அவிழ்த்து எடுத்துட்டு வர ரிவால்வருடனும், கத்தியுடனும் கிளம்பினாரு.அந்த கத்திய நான்தான் முதல்நாள் சாணை பிடித்தேன்.அதுல என்னோட கைரேகைதான் இருந்தது.உங்களுக்கு தெரியும். உலோகத்தை வெறும் கையால் பிடித்தால் தோலுடன் ஒட்டிக்கும்னு.அதனால் கிளவுஸ் போட்ருந்தாரு.திடீர்னு துப்பாக்கி வெடிக்கிற சத்தம்.போய் பார்த்தா கழுத்தறுபட்டு கிடக்கிறார்.கத்தியில் என்னுடைய கைரேகை இருந்ததால் நான் கொலை பண்ணியிருப்பேன்னு கைது பண்ணிட்டாங்க! ஆனா சத்தியமா நான் கொல்லலை! “

“ஒகே! கயிற்றை அவிழ்க்க நீ ஏன் போகலை? “

“எனக்கு காலில் அடிபட்டிருந்தது.நடக்க முடியலை! “

அவர்கள் வெளியே வந்து இன்ஸ்பெக்டரை சந்தித்தனர்.போட்டைவை தூக்கி டேபிளில் போட்டவர் “முதலில் லாரன்ஸின் காலடிதடம் பனியில் பதிவாகியிருக்கு.ரெண்டாவது ஜாக்குது.ஆனா கத்தியில இவனோட ரேகை இருப்பதுதான் குழப்புது.நாயும் பனியில மோப்பம் பிடிக்க மாட்டேங்குது.!”

“ஆமா! நாயுக்கு நீர் நிலைகளை தாண்டி போயிட்டா மோப்ப சக்தி குறைந்துவிடும்! “என்றான் பில்.

காரை கிளப்பி வீட்டிற்கு வந்த போது டீகோ “வேற யாராவது கொலை பண்ணியிருப்பாங்களா பாஸ்! “என்றான்.

“வாய்ப்பிருக்கு! “

“எதை வைச்சு சொல்ரீங்க பாஸ்? “

“பூமாரங்! ஆஸ்திரேலிய பழங்குடியினரான அபாரிஜின்ஸின் வேட்டை ஆயுதம்.வி சேப்ல இருக்கும் இந்த ஆயுதம் விலங்குகளை தாக்கிட்டு திரும்ப கைக்கே வந்து விடும்! தமிழர்களின் பூர்விக ஆயுதம் வளைதடி, வளரின்னு பேரு! “

“அது மரத்துல செய்யப்பட்டதுதானே? “

“ஆமா! அந்த வீ வளைவில் பிளேடு போன்ற பொருளை வைக்க எவ்வளவு நேரமாகும்.அப்படி செய்து கொன்றிருந்தாலும் ரத்தம் ஒரு நேர்கோடாக சிந்தியிருக்கனும்.அது போட்டோவில் இல்லை! “

வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தவன் “அவங்க ரெண்டு பேரூம் எடுத்த டாக்கு மெண்டரிகளை போடு! எதாவது கிடைக்குதான்னு பார்ப்போம்! “என்றான்.

டிவியில் ஓடிய எல்லா டாக்குமெண்டரிகளையும் பார்த்தவன் அறுந்து கிடந்த கயிறு போட்டோவை உற்றுப் பார்த்தான்.

“டீகோ! இது கொலையில்லை.!ஒரு விபத்து! “

“என்ன பாஸ் சொல்ரீங்க! “

“ஆமா! விளக்கமா சொல்ரேன் கேளு.முடிச்சுல மொத்தம் 2000 வகை இருக்கு.1944ல் கிளிபர்ட் டபிள்யூ ஆஸ்லிங்கிறவரு இதை பத்தி ஒரு புக் எழுதுனாரு.அதோட பேரு “தி ஆஸ்லி புக் ஆப் நாட்! “நம்ம ஜாக் அவிழ்க்க கஷ்டமான ஒரு முடிச்சை போட்டு பழகியிருக்கான்.அது அவனோட மாத்த முடியாத ஒரு பழக்கமாக மாறி விட்டது.எப்போதுமே கயிறு தண்ணீர் பட்டால் இறுகிவிடும்.பனி ஈரத்தில் கயிறை அவிழ்க்க முடியாமல் கடுப்பான லாரன்ஸ் கயிறை அறுக்க முயற்சி பண்ணியிருக்கான்.இவங்கிட்ட இருந்த பழக்கம் என்னன்னா கயித்துக்குள்ள கத்திய விட்டு உள்ளிருந்து வெளியே அறுப்பது.மூணு செண்டி மீட்டர் தடிமனுள்ள கயிறை ஒரு செண்டிமீட்டர் அறுத்தவுடனேயே கூர் மழுங்கி விட்டது.பல்லை கடிச்சுகிட்டு மீதி ரெண்டு செண்டி மீட்டரை வேகமா அறுத்திருக்கனும்.கடைசி சரடும் கட்டான வேகத்தில் கத்தி கழுத்தில் பாய்ஞ்சிருக்கனும்.இந்த போட்டோவை பாரு.உள்ளிருந்து நேரா வருகிற வெட்டு பிறகு தாறுமாறா வந்திருக்கு!! “

“இதை எப்படி புரூப் பண்ரது? “

“அவங்க எடுத்த டாக்கு மெண்டரியில் பல இடத்துல ஜாக் முடிச்சு போடுர காட்சியும், லாரன்ஸ் கயிறை உள்ளிருந்து வெட்டுவதும் பல இடத்தில் வருது! அதுதான் புரூப்! “

“பிரமாதம் பாஸ்! “

“விசித்திரமா இருக்கு! நமக்கு வர்ர கேஸெல்லாம்! “

“நான் இன்ஸ்பெக்டரை வரச் சொல்கிறேன்! “

“வந்தவுடன் எழுப்பு! “என்ற பில் குறட்டை விட தொடங்கினான்.