புற்றுநோய் சந்தேகங்கள்- நேரலை

95

பெரும்பாலான புற்றுநோய்கள் முதல்நிலையிலேயே கண்டறியப்பட்டு, முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் குணமாகும் வாய்ப்பு அதிகம். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெருவாரியான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

நமது நாட்டில் புற்றுநோயாளிகளில் 70% பேர் புகை/புகையிலை மற்றும் அடுத்தவர் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளினால் அவதியுறுபவர்கள் ஆவர்.

எனவே, இந்த நோய் பற்றிய விபரங்களும் இதற்கான சிகிச்சை முறைகளுள் ஒன்றான கதிரியக்கம் பற்றிய விபரங்களடங்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நேரலையாக ‘வெப்காஸ்ட்’ மூலம் ஒளிபரப்பு செய்வதற்கு இந்திய மருத்துவ அசோசியேஷன் முடிவெடுத்துள்ளது.

இன்று பிற்பகல் (இந்திய நேரம்) 03:30 முதல் 04:00 மணி வரையில் இதுwww.ima-india.org/ என்ற முகவரியிலும் அல்லது Heart Care Foundation of India உடைய இணையதளம் http://www.heartcarefoundation.org/ என்ற முகவரியிலும் காணலாம். உங்களின் சந்தேகங்களையும் மருத்துவர்களிடம் கேட்கும் (சாட்) வசதியும் செய்யப்பட்டுள்ளதாம்.

இதை அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

ரபீக் சுலைமான்