சாக்லெட் ரஜினி

182

அட்டகத்தி, மெட்ராஸ் படத்தை இயக்கிய ரஞ்சித், ரஜினியை வைத்து அடுத்து இயக்கிக் கொண்டுயிருக்கும் கபாலி திரைப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் ரஜினியின் கெட்டப் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் சென்னையை சார்ந்த தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று கபாலி திரைப்படத்தில் ரஜினியின் கெட்டப்பை சாக்லெட்டில் உருவாக்கியுள்ளது. 600 கிலோ எடைக்கொண்ட இந்த ”சாக்லெட் கபாலி” முழு ரஜினி உருவம் பெற்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

அகம்