ஒப்பீடு

92

ஒப்பிட்டால்
பங்களா அளவிற்கு வேலி போட்ட
வீடு இல்லை கிராமத்தானிடம்…

ஒப்பிட்டால்
இரண்டு பொம்மேரியன் நாய்கள்
காவல்காரர்கள் இல்லை கிராமத்தானிடம்

ஒப்பிட்டால்
ஏரிக்கரையோரம் பதினைந்து ஏக்கரும்
நகரத்தின் மத்தியில் இரண்டு
குடியிருப்புகளும் இல்லை கிராமத்தானிடம்

ஒப்பிட்டால்
கண்ணாடி அணிந்த கணினி போன்றதான
குழந்தையும்
உடலுக்கும் உடைக்கும் வித்தியாசமின்றி பளபளத்திடும்
மனைவியும் இல்லை கிராமத்தானிடம்

ஒப்பிட்டால்
ஆடி மகிழுந்தும் அபாச்சி
மோட்டார் வாகனமும் இல்லை கிராமத்தானிடம்

ஒப்பிட்டால்
அந்த நகரத்துக்காரனைப்போல் ஆஞசியோ பிளாஸ்டி முடித்து
நாள் தவறாது மாத்திரை எடுக்கும்
கட்டாயமும் இல்லை கிராமத்தானிடம்.

-யோகன்