தக்‌ஷன் ஹைக்கூ

106

கிளையில் அமர்ந்தபின்
பறக்க தொடங்கியது
குயிலின் பாட்டு!
****************

வயிறு பெருக்கிறது
வறுமையால்…
வாடகைத் தாய்!
****************

பிரிந்த பின்பும்
நீங்கவேயில்லை
மண்ணில் வேர் வாசம்!
****************