முகனூல் நண்பர்கள் சந்திப்பு எதற்கு?

1123

ளர்ந்து வரும் இன்றைய இணையச் சூழலில் நட்புணர்வுகள் பெருகுவதும், இந்த நட்புணர்வே குற்றங்களாக உருமாறுவதும் சகஜமாகிவிட்டது. இதற்கான மூல காரணங்களை தேடிப்பிடிக்க கிளம்பினீர்கள் என்றால் கிணறு வெட்டிய பூதம் கதை தான். சமூக வலைத்தளமான பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்றவையே இதற்கான அடிப்படைகள்.

குற்றங்கள் பெருகவும், வதந்திகளை பரவவும் காரணமாக இருக்கும் இத்தகைய சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையமோ, நடைமுறைக்கு சாத்தியமில்லா சட்டங்கள் வளைந்து கொடுக்கின்றனவா என்பது ஆராய வேண்டிய ஒன்று.

முழுக்க முழுக்க நட்பு பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட முகனூல், படிப்படியாக பரவி இன்று உலகை ஆட்டி வைக்கிறது. சாதரண வாசகனையும், பிரபல ஆளுமைகளையும் இந்த முகனூல் ஒரு சம தளத்தில் அமர்த்தி ஏற்றதாழ்வுகளை குறைக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

நவீன திருடர்களும் இங்கு தான் இருக்கிறார்கள். போலியான தகவல்களை தந்து பணம் பறிக்கும் கும்பலும் இங்கு தான் இருக்கிறது. பெண்களை மாயவலையில் வீழ்த்தி கொடூரமான குற்றங்களுக்கு ஆளாகும் நபர்களும் இங்கு தான் இருக்கிறார்கள். இவ்வளவு பிரச்சனைகளும் முளைக்கும் இடம் முகனூல் நண்பர்கள் சந்திப்பு என்றால் அது மிகையல்ல.

ஏற்கனவே பெரும் வெள்ளத்தில் சில கடலூர் நபர்களின் முகத்திரை கிழிந்து தொங்கியது. தற்போது புதிய முறையினை கையாண்டு இந்த நவீன திருடர்கள் பணம் பறிக்கும் செயலில் இறங்கி உள்ளனர்.

கடலூரைச் சேர்ந்த பத்திற்கும் அதிகமான நபர்கள் பாண்டிச்சேரியில் ஒரு முகனூல் நண்பர்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்த…… அதில் ஒரு அளவிற்கு மரியாதையும் கணிசமான பணத்தையும் WhatsApp Image 2016-08-06 at 3.51.32 PMகொள்ளையடித்தனர்.

இத்தகைய கூட்டங்களில் வரவு-செலவு கணக்குகளை யாரும் கேட்பதில்லை என்கிற தைரியமாக இருக்கலாம்.

பத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் சில பேர் மட்டும் தனியாக பிரிந்து அடுத்த முகனூல் கூட்டத்தையும் நடத்தி காசு பார்க்க ஆசைப்பட்டதின் விளைவு சமீபத்தில் நடந்த இன்னொரு பாண்டிச்சேரி முகனூல் சந்திப்பு. முதல்முறை கிடைத்த வெற்றியினை மட்டும் முன்வைத்து இவர்கள் பண வசூலில் இறங்க, வசூலான தொகை மட்டும் மூன்று லட்சம் ரூபாய்.

கூட்டம் நடத்த முன் அனுபவமில்லா இந்த நபர்களை நம்பி முகனூல் கூட்டத்திற்கு வருவதாக சொன்ன நபர்கள் மட்டும் ஆயிரத்தை தொட்டு நிற்கிறது. ஆனால் கூட்டத்திற்கு வந்த நபர்களோ முன்னூறை தாண்டவில்லை. போதுமான உணவு, குடிநீர் என அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யாமல் நடத்தப்பட்ட இந்த முகனூல் கூட்டத்தில் பெரும்பாலும் பெண் தோழிகளை கவர்வதற்கும், அடுத்தவர் காசில் சுகபோக அனுபவத்தை பெறவும் மட்டுமே நடத்தப்பட்டதாகும்.

WhatsApp Image 2016-08-06 at 3.54.04 PMஇரண்டாவதாக நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கான ஆன செலவு என்னவோ கனிசமான தொகை தான். கிட்டத்தட்ட வசூலான தொகையில் 50சதவிகிதம் மீதி இருக்கும் நிலையில் கணக்கு கேட்கும் நண்பர்களை “குடிகாரன்” எனவும், “சாதிப்பெயரை” சொல்லியும் திட்டி வரும் இந்த கடலூர் நபர்கள் அடுத்த கட்டத்திற்கான வசூலையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். (விரைவில் சட்டரீதியான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட நபர்கள் சந்திப்பார்கள்).

இத்தகைய நவீன திருடர்களிடமிருந்து குற்றங்கள் நடக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். தமிழகமெங்கும் அடுத்தடுத்து நடக்கும் இருக்கும் முகனூல் நண்பர்கள் கூட்டங்கள் முறையான அனுமதி பெற்று நடைபெறுகிறதா? கூட்ட நெறிமுறைகளை பின்பற்றுகிறதா என்பது எல்லாம் காவல்துறை ஆராய வேண்டிய ஒன்று.

  • ராஜி