தேவதைகள் – சின்னராஜா

220

வெண்ணிற உடை

சிறகுகள்

மாறா இளமை

மூடா விழிகள்

மந்திரக்குச்சி

தோன்றி மறையும் சக்தி

ஒளிவட்டப் பேரழகு …

இவை இல்லாமலும்

இருக்கிறார்கள் ..

வாழ்வு தந்த

காயங்களை மறைத்து

மனவலி மறந்து..

ஊக்கமதை விதைத்து

நம்பிக்கை உரமளித்து

பார்வையாலே வரமளித்து

பேச்சினாலே உயிரளித்து ..

பிறர் தேவை குறித்து

தன் தேவைகள் குறைத்து

தனைத் தேய்த்து கரைத்து …

தாயாய் ..

பாட்டியாய் ..

சகோதரியாய் ..

தோழியாய் …

காதலாய் …

மனைவியாய் ..

மகளாய் …

பேத்தியாய் …

தேவதைகள்…….