தேர்தல் தள்ளிவைப்பு

54

தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி 2 வேட்பாளர்கள் உள்பட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், 2 தொகுதிகளுக்கான தேர்தலை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணைய வழக்கறிஞர் இன்று உயர்நீதிமன்ற நீபதிகள் அறையில் நீதிபதிகளை சந்தித்தார். அப்போது, 23-ம் தேதி இரு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படாது என்றும், வேட்பாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி அதன்பிறகு தேர்தலை நடத்தும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த தகவலை நீதிமன்றத்தில் கூறும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர். எனவே, தேர்தல் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

2 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள 23-ம் தேதி, ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

-அகம்