தேர்வு முடிவுகள்

105

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மே 17-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும், மே 25-ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியாகும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17-ம் தேதி காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு மே 25-ம் தேதி காலை 9.31 மணி முதல் 10.00 மணிக்குள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியில் அறியலாம்.

அதுதவிர ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையத்திலும், அனைத்து மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களில் தேர்வு முடிவுகளை இலவசமாக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ம் தேதியே முடிவடைந்துவிட்டது.

அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 11 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.