ஞானம் மகன் கவிதைகள்

139

நடை பழகும் போதே
நடை திறந்ததிது..
நானாய் எடுத்த முடிவு. …

என் அகத்தாளை விட
எனைப் புரிந்தது…

பயமறியா, இனமறியா
நிறமறியா, செலவறியா
நேரமறியா…. என
அத்துணை அறியாச்
சொல்லில்லும்….
அறிந்தே ஆற்றியது….

என்மேல் எனக்கு இருக்கும்
உரிமை விட அதிகம்
கொண்டிற்று..

தவற்றைப் பழித்து
பகை துரத்தி
பலன் எதிர்பாராதது
பணத்தால் பிணமாகாது…
சிக்கலாயிரமிடையில் -நான்
சிக்கித் தவித்தாலும்
அகதியாய் நான் மாறா வண்ணம்
புனரமைக்குதிந்த நட்பு….

பெண் நட்பே
முதல் நட்பு -தாய்

என் காதல் மணம்
காவு கேட்பினும்
தாரேன்….

விட்டுச்செல்வேன்-நான்
என் நட்பை…
சொத்தாக
என் மகனுக்கே….

***************************

செல் ! செல் ! சொல்லோடு செல். !
உன் செல்களோடு கலந்திட்ட செல்போனோடு செல் …!
தேடுறோம் ..தேடுறோம் ..
தேவையைத் தேடுறோம் ..
தேவதையையும் தேடுறோம் ..
தடங்கல் இங்க இல்லை ..
செல்போன் வடிவிலே..
Facebook ல Face ஐ மாற்றி…
தங்கிலீஸ்ல கவிதை எழுதி
Bad boy Image ஐ மாற்றி..
Image building நடக்குது …
உறவுகள் வளருது ..
முகம் காணாமலேயே…
சீக்கிரம் சிதையுது …
அகமறியாமலே…
மாற்று உறவைத்தேடுது ..
மறுபடி சிதையவோ
சிதைக்கவோ….
செய்திகளும் வதந்திகளும்
மிக வேகமாய் பரவுது ..
தன் குணம் இதுவெனக் Status களும் comment களும் சொல்லுது ..
Fake ID வந்து தான் உசிரத்தான் வாங்குது …
Profile picture மட்டும் பார்த்து
பழகி உருகி நெகிழ்ந்து ,
பணம் இழந்து ,மனம் இழந்து ,
மானம் இழந்து , உள்ளம்
புண்ணாகிப்போகுது…
புத்தி பித்தாகிப் போகுது …
செல்போனை தோண்டுறவன்
செலவாளி அப்ப ..
இந்த “செல்லபோன்” இல்லாதவன்
செல்லாக்காசெனும் நிலைமை இப்ப…
உலகமது உந்தன் பையில் ..
அது நல்லுலகா ? தீயுலகா ?
பார்த்து எடு ..உந்தன் கையில் ..!
SMS மூலம் பேச்சை நாமும் சுருக்கியாச்சு ..
வாழ்த்துக்களும் ,வசவுகளும் உணர்ச்சியற்றுப் போச்சு ..
அங்கேயிருக்கேன், இங்கேயிருக்கேன்னு
பொய் சொல்லியாச்சு !
Missed call கொடுத்து அடுத்தவர் பணம் திருடியாச்சு !
பேசத்தானே..போன் என்ற நிலைமை மாறிப் போச்சு …!
நகை போல , செல்போனால் உறவைத் தரம் பிரிச்சாச்சு ..
Ring Tone ஐ அலறவிட்டு பிறரைப் பதற வச்சாச்சு …!
சிறுசுகளும் பெருசுகளும் செல் அடிமையாச்சு …
வீட்டுக்குள்ளே நுழையும்முன்ன எல்லாத்தையும் Delete பண்ணியாச்சு ..
இரண்டு சிம் இரண்டு போன் என்று இரட்டை வேடம் போட்டாச்சு ..
தலையணைக்குத்துணையெனவே தூக்கி வச்சாச்சு ..
புத்தகத்து மதிப்பத்தான் தரமிறக்கியாச்சு..
நேரம் அதும் செல்லரித்து செலவழித்து போச்சு.!
செல்போணே துணை என்ற நிலைமை வந்தாச்சு ..
இது நம் கையில் இல்லையென்றால் மனம் பதறிப்போச்சு …
Whatsapp கேட்குது What’s Next என்று விரல் பிடித்து இழுக்குது …
ஏற்கனவே டிவிப்பெட்டி வீட்டைக் கெடுத்தாச்சு ..!
நஞ்சும் அது போனில் இல்ல ..நம் மனதில் தான் என கண்டுபிடிச்சாச்சு …
வாரத்தில் ஒரு நாள் Switch Off பண்ணு ..நல்லுறவுக்கான வழிகளை நீ Switch On பண்ணு…
செல் ! செல் ! செல்லோடு செல் !
நல்லதை மட்டும் மனதோடு கொள் !
சொல் ! சொல் ! நல்வார்த்தை சொல் !
நல்மனதொடு கலந்திட்ட மனநிறைவு கொள் !
கொல் ! கொல் ! தீயவை கொல் !
நல்லதை மட்டும் உன் மனதோடு கொள் !

“ஞானம் மகன் “
G.K.சின்னராஜா