பூண்டு குழம்பு

78

தேவையான பொருட்கள்:-

உரித்த பூண்டு பற்கள் ———- 25
வெங்காயம் ———————-1
தக்காளி—————————1
புளி——————————–பெரிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள்———————1 டீஸ்பூன்
தனியா தூள்———————-1/2 டீஸ்பூன்
துருவிய வெல்லம்—————1/4 டீஸ்பூன் (விருப்பபட்டால் )

உப்பு தேவையான அளவு .

தாளிக்க:-

நல்லெண்ணெய் —————–1/4 கப்
தாளிக்கும் வடகம் (அ )
கடுகு,சீரகம் ———————-1/4 டீஸ்பூன்
பெருங்காயம் ——————–1/4 டீஸ்பூன்
வெந்தயம் ————————1/4 டீஸ்பூன்
பூண்டு—————————–6 பல்
கருவேப்பில்லை சிறிதளவு

செய்முறை:-
வெங்காயம், தக்காளி இவற்றையும் அறிந்து வைத்து கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பூண்டை தோல் நீக்கிவிட்டு நன்றாக நசுக்கி வைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வடகத்தை நன்றாக பொரிய விட்டு நசுக்கி வைத்துள்ள பூண்டு மற்றும் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள், வெங்காயம், தக்காளி,கருவேப்பில்லை இவற்றை ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

பூண்டு பற்கள் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,தனியாதூள் , உப்பு சேர்த்து மிதமான தீயில் மீண்டும் இரண்டு நிமிடம் நன்றாக வதக்கி 2 கப் நீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

பிறகு மூடியை திறந்து தண்ணீரில் ஊறவைத்த புளியை கரைத்து தேவையான அளவு குழம்பில் ஊற்றி விருப்பபட்டால் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக கலந்து மீண்டும் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான பூண்டு குழம்பு தயார். இந்த பூண்டு குழம்புடன் பருப்பு கடையல் மற்றும் எல்லா விதமான கூட்டுவகைகள்,அப்பளம்,வடாம் இவை நன்றாக பொருந்தும்.

குறிப்பு :

எல்லா வகையான கார குழம்புகளுடனும் சிறிது வெல்லம் சேர்க்கும் போது சுவை மேலும் அதிகரிக்கும். புளிப்பு, உப்பு, காரம் அனைத்தையும் அவரவர் ருசிக்கேற்ப கூட்டியோ (அ) குறைத்தோ சேர்த்துக்கொள்ளலாம்.

அகம்