ஸ்வீட் கார்ன், பாசிப்பருப்பு தோசை.

87

தேவையான பொருட்கள்:-

வேகவைத்த ஸ்வீட் கார்ன் ————1 கப்
பாசிப்பருப்பு —————————–1 கப்
அரிசி மாவு ——————————1 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் ———————-2
பச்சை மிளகாய் ————————-காரத்திர்க்கேற்ப
பூண்டு ———————————–2 பல்
இஞ்சி ————————————சிறிய துண்டு
சோம்பு ———————————–1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் ———————-2 டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு.

செய்முறை:-

முதில் பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். மிக்ஸி ஜாரில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி , சோம்பு. தேங்காய் துருவல் மற்றும் தோசைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 2 சுற்று சுற்றி எடுத்து அதில் முன்பே வேக வைத்து எடுத்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன், ஊறவைத்த பாசிப்பாருப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிகவும் நைசாக அல்லாமல் கொஞ்சம் கொர கொரப்பாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டு முறுகலாக வேக வைத்து எடுத்து சுட சுட பரிமாறவும்.

சத்தான, சுவையுள்ள இந்த ஸ்வீட் கார்ன் , பாசிபருப்பு தோசையுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பு:- மாவு புளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அரைத்து உடனடியாக தோசை வார்த்து சாப்பிடலாம்.

பச்சை மிளகாயை அவரவர் ருசிக்கேற்ப சேர்த்துகொள்ளலாம்.

விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி 1 நிமிடம் வேக விட்டு எடுத்து பரிமாறலாம்.

அகம்