இயற்கை வாழ்வியல்

75

அவசர உலகில் அதனைப் பின்தொடர்ந்து ஒடவேண்டிய கட்டாயத்தின் பெயரில் ஒடிக்கொண்டிருக்கிறோம். எவை தீயது, எவை நல்லது என்பதை அறியகூட நமக்கு நேரம் கிட்டவில்லை, நேரம் கிட்டினாலும் அதனை அதற்குச் செலவிட நாம் விருப்பமும் கொள்ளவில்லை. எனெனில் அந்த நேரத்திலும் நாம் பாழாய் போன பணத்திற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அது நடப்பு வாழ்க்கைக்கு தேவையுமாகவும் இருக்கிறது. சமீப காலமாக நமது வாழ்வியல் இருப்பிடத்தை இரண்டாக நமது மக்கள் இராண்டாகப் பிரித்தனர்

1.கிராமப்புற வாழ்க்கை
2.நகர்ப் புற வாழ்க்கை

இந்த இரண்டு வாழ்க்கைக்கும் ஏதேனும் வேறுபாடுகள் இருக்கிறதா என்ற கேள்வியை என்னிடம் வைத்தால் இருக்கிறது என்ற பதிலையே நான் முன் வைக்க விழைகிறேன். உடை வழகத்திலும், பேச்சு வழக்கத்திலும் மட்டுமல்லாது முக்கியமாய் ஒரு வேறுபாடு இருக்கிறது. அது “உணவு வேறுபாடு” என்பதை ஆழமாகப் பதிவு செய்ய விருப்பம் கொள்பவன் நான்.

கிராமத்தான் என்று நகரத்து மனிதன் சிரிப்பதின் நோக்கத்தைப் பார்த்தால் கிராமத்தானுக்கு எதுவும் தெரியாதாம். ஆம் அது சரியே “ஆர்கானிக்” என்ற வார்த்தை அவனுக்குத் தெரியாதுதான்.
அன்றாட நமது வாழ்க்கையின் முழித்த முதல் நொடியிலிருந்து இரவுக் கண் மூடும் வரை நாம் உபோயோகிக்கும் அனைத்திலுமே நமது நண்பன்போல் பின் தொடர்ந்து வருபவன் “வேதியியல்” என்பவன்.

உணவில் இருக்கும் வேதியல் :

காலையில் பல் தேய்த்தல் : பல்லைத் தேய்த்தல் என்பதிலயே அதனின் அர்தமும் அடங்கியுள்ளது. விளம்பரத்தில் ஆடம்பரமாய் காட்டும் பேஸ்ட்களும், ப்ரஸ்களும் நமது வீட்டின் பாத்ரூமில் அணிவகுத்து நிற்கும். அந்தப் பேஸ்டூகளில் எவ்வாறு வேதியல் உள்ளது என்பதை அறிவதற்கு பேஸ்டின் பின்னால் வண்ணத்தின் சாயம் பூசப்பட்டிருக்கும்.
கருப்பு சதுரம் : முழுக்க முழுக்க வேதியல் நிறைந்தது
சிவப்பு சதுரம் : பாதி வேதியலும், மீதி இயற்க்கையும் அமைந்துள்ளது
ஊதா சதுரம் : இயற்கையும், மருத்துவமும் அடங்கியுள்ளது
பச்சை சதுரம் : முற்றிலும் இயற்க்கை நிறைந்தது

காலை உணவு : காலை உணவைத் தவிற்கும் பழக்கம் இந்த நகரத்து மக்களிடையே பரவியுள்ளது. காரணம் யாதெனில் ஒரு வேலை உணவை தவிர்பது உடல் நலனை சரியாக கொண்டு செல்லுமாம். சரியாகத் தவறை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மூன்று வேலை உணவின் இடைப்பட்ட நேரத்தைக் கணக்கிட்டால் இரவு சாப்பிட்டப் பின் காலை உணவுக்கான இடைவேளை அதிகமாக இருக்கும். காலை உணவிற்கான ஆங்கில பெயர் ப்ரேக் பாஸ்ட் (BREAK FAST). FAST-ன் தமிழாக்கம் விதரம் – விரதம் – நோன்பு. அதனை உடைப்பதலால் அதற்கு அப்பெயர் காரணமானது.

மதிய உணவு : ”ப்ளாஸ்டிக் மண்ணின் எமன்” உலகத்தையே தாங்கும் மண்ணிற்க்கே ப்ளாஸ்டிக் ஏதிரியாக இருப்பின் நீங்கள் உண்ணும் உணவில் இலைக்குப் பதிலாய் உபோயோக்கிக்கும் ப்ளாஸ்டிக் பேப்பர், ப்ளாஸ்டிக் தட்டுஎவ்வாறு உங்கள் உடலைப் பேணிகாக்கும்? நாகரீகம் என்ற பெயரில் நம்மை நாமே நம் உடலுக்கு விஷத்தைத் திணித்து கொண்டிருக்கிறோம்.

மாலை சிற்றுண்டி : அடுத்தவன் உபயோகித்த கண்ணாடி கோப்பையை நாம் உபோயோகிக்க பயம் கொள்கிறோம். அதற்குப் பதிலாய் ஒருமுறை உபயோக்கிகும் பேப்பர் ப்ளேட் எடுத்துக் கொள்கிறோம். அதனின் உட்புறத்தை வலுவாக இருப்பதற்காக உற்பத்தி செய்கிறவர் மெழுகை கொண்டு உபயோகிறார்கள். அதுமட்டுமின்றி கண்ணாடி கோப்பையில் எவ்வித அழுக்கும் படியாது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்

இரவு உணவு : இரவு உணவில் கண்டிப்பாகச் சாப்பாடு மேஜையில் இடம் பெறுவது மைதா. மனிதன் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளகூடாத ஒரு உணவுப் பொருள் தான் “மைதா”. அறிவியல் அறிக்கை சொல்வது யாதெனில் மனிதனுக்காக உருவாக்கும் மருந்தினை எலிக்குக் கொடுத்து சோதனை செய்வார்களாம். அதன்படி சர்க்கரை நோய்கான மருந்தினை எலிக்கு கொடுத்தார்கலாம். எலிக்கு எவ்வாறு சர்க்கரை நோய் வந்தது என்ற கேள்விக்குப் பதில், மைதாவில் உள்ள வேதிப் பொருளை எலிக்கு கொடுத்துச் சர்க்கரை நோய் வரச்செய்து மருந்தைச் சோதித்தார்கலாம். அவ்வளவு விஷத் தன்மையுடையது மைதா.

இவ்வாறு முழுக்க முழுக்க உடலுக்கு அபாயமான உணவைத் தினமும் சேர்த்து கொண்டிருக்கிறோம்.
கிராமங்களில் மருத்துவமும் இயற்கையயை சார்ந்தே இருக்கும். சளி எனில் பாலை நன்றாகக் காய்த்து அதில் மிளகு தூளும், மஞ்சள் தூளும் கலந்து சூடாகக் குடித்தால் சளியும், தொண்டை கரகரப்பும் பறந்துச் சென்றுவிடும். ஆனால் இன்று அந்த மருந்துகளின் உருவாக்கத்தை ஆராய்ந்து பார்த்தோமானில் அதிலும் வேதியில் வேற்றுமையின்றி அமர்ந்துள்ளது. மிளகு, மஞ்சள் உருவாக்குதலுக்கு ரசாயன மருந்துகள் அடிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு கிராமத்திற்கு சென்றிருந்தேன். பேச்சு வழக்கில் விவசாயத்தின் நடப்பைக் கேட்க, ஒவ்வொரு பதில்களும் அதிர்ச்சியை மட்டுமே அள்ளித் தந்தது. விதை விதைத்தவுடன் ஆரம்பிக்கிறது வேதியலின் வேளைகள். வித்திட்ட விதை முளைக்க ஒரு மருந்து, தளைத்து வளர ஒரு மருந்து, பூப் பூக்க ஒரு மருந்து, காய்யாக்க ஒரு மருந்து, கனியாக ஒரு மருந்து, இது மட்டுமில்லாமல் சுற்றி வளரும் களையை அழிக்க ஒரு மருந்து.
விவசாயத்தை குறைச் சொல்லிப் பயனில்லை. ஏனெனில் உணவின் தேவை கடல் போன்று இருக்கிறது. ஆனால் விவசாயமோ கடலில் இருக்கும் அறிய வகை உயிரினமாய் இருக்கிறது. இதன் பொருட்டே முழுக்க முழுக்க வேதியலை கொண்டு உருவாக்கப் பட்ட பொருட்கள் கடைவீதிக்கு அழகாய் உடை அணிந்து தோரனமாய் இருக்கிறது.

நோய்களும், மருத்துவர்களின் அறிவுரைகளை கேட்டுப் பயம் கொண்டு உடல்மேல் அக்கறை கொண்டு உணவின் மதிப்பை மக்கள் அறிகின்றனர். அதனின் தாக்கமே ஆர்கானிக் உணவுகளையும், “குதிரைவாலி” “சாமை” “வரகு” என்ற உணவை நாடுகின்றனர். அதனின் தேவையால் அதிலிலும் வேதியலை புகுத்துகிறார்கள்.
மக்கள் உண்ணும் உணவிற்கு முக்கியத்துவம் அளித்து ஆர்கானிக்கை மட்டுமே தேடிச் செல்ல வேண்டும். அவ்வாறு தேடிச் சென்றால் தான் ஆர்கானிக்கின் உற்பத்தி அதிகமாகும். ஆர்கானிக் மட்டும் உலகத்தில் நின்று வேதியியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும்.

(இதை ஒரு “ Dr.“ சொல்கிறார் என்று நினைக்காதீர்கள், உடல்மேல் அக்கறைக் கொண்டு எழுதும் சராசரி மனிதனே)

நோயற்ற வாழ்க்கை வாழ வாழ்த்துகள்

-சேகர் சக்திவேல்