கேரட் கார புட்டு

38

தேவையான பொருட்கள் :-

துருவிய கேரட் —————–1 கப்
வெங்காயம் ———————1
பச்சை மிளகாய் —————- 4
பூண்டு ————————–-5 பல்
துருவிய தேங்காய் ————-1/4 கப்
மஞ்சள் தூள் ——————–1/4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு.

தாளிக்க :-

எண்ணெய் ———————–2 டேபிள் ஸ்பூன்
கடுகு ————————–—1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு —————-1 டீஸ்பூன்
கருவேப்பில்லை சிறிதளவு .

செய்முறை :-

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும்.

பூண்டு பற்களை நன்றாக நசுக்கி வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து கடுகு வெடித்ததும் நசுக்கி வைத்த பூண்டை சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய்,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி கேரட் துருவல் மற்றும் உப்பையும் சேர்த்து சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் நிதானமாக கலந்து விட்டு கொண்டே இருந்தால் நன்றாக வெந்து உதிரி உதிரியாக வரும்.

கடைசியாக தேங்காய் துருவல்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விடவும்.

இந்த சுவையான கேரட் புட்டை சாம்பார், ரசம். தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குழந்தைகளுக்கு பச்சை மிளகாயை நீக்கி விட்டு சாதத்துடன் கலந்து மதிய உணவாக லஞ்ச பாக்ஸில் வைத்து கொடுக்கலாம்.

குறிப்பு :- கேரட் வேக வைக்கும் போது சிறிதளவும் தண்ணீர் சேர்க்காமல் வேக வைத்தால் தான் உதிரி உதிரியாக வரும். மூடி போட்டும் வேக வைக்க கூடாது.

பச்சை மிளகாயை அவரவர் ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும்.

அகம்