தலைவர்கள் பிரச்சாரம்

40

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்:

நாளை (5–ந்தேதி) முதல் 8–ந்தேதிவரை பிரசாரம் செய்கிறார். அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

5-ந்தேதி- காட்டுமன்னார்கோவில், 6-ந் தேதி- சென்னை ஆர்.கே.நகர், பொன்னேரி (மீஞ்சூர், பொன்னேரி)

7-ந்தேதி- திருவள்ளூர் (கடை வீதி, திருவாலங்காடு), அரக்கோணம் (பழைய பேருந்து நிலையம், குரு வராஜப்பேட்டை), வேலூர், வந்தவாசி, திருப்பெரும்புதூர் (பொதுக் கூட்டம்).

8–ந்தேதி– மயிலம் (ஜீவனூர், கூட்டேரிப்பட்டு), வானூர் (கிளியனூர், திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு, கண்டமங்கலம்), செய்யூர் (சித்தாமூர், செய்யூர்), திருப்போரூர் (ம.தி.மு.க. வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து பொதுக்கூட்டம்), சோழங்கநல்லூர் (செம்மஞ்சேரி, கண்ணகி நகர்).

வைகோ:

மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே 2 கட்ட பிரசாரத்தை முடித்துள்ள வைகோ இன்று முதல் 3-வது கட்டமாக 11 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார்.

செஞ்சி அருகே உள்ள அவலூரில் இன்று மாலை 4 மணியளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதை தொடர்ந்து சேத்பட் (போளூர்), ஆரணி, ஆற்காடு தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.

ஆர்.கே.நகர்

நாளை (5-ந்தேதி) – ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம், ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், அண்ணா நகர் தொகுதிகள்.

6-ந்தேதி – காலை வானூர், திண்டிவனம் தொகுதிகளிலும், மாலையில் திருப்போரூர் தொகுதி.

7-ந்தேதி – காலை ஆலங்குடி, காரைக்குடி, பிற்பகல் 3.30 மணிக்கு இளையாங்குடி, கமுதி, பேரையூர், முதுகுளத்தூர், சிக்கல், கீழக்கரை, ராமநாதபுரம்.

8-ந்தேதி – காலை உசிலம்பட்டி தொகுதி, மாலையில் தேனி (பெரியகுளம்), போடி, உத்தமபாளையம், தேவாரம், கம்பம் பகுதி.

9-ந்தேதி – காலை ஈரோடு மேற்கு, மாலையில் சிங்காநல்லூர், கிணத்துக்கடவு தொகுதிகள்.

10-ந்தேதி – காலை மதுரை தெற்கு தொகுதி, மாலை சாத்தூர் தொகுதி.

11-ந்தேதி – காலை தஞ்சாவூர், பாபநாசம், மாலை திருச்சி-தேர்தல் சிறப்பு மாநாடு.

12-ந்தேதி – கோவில்பட்டி.

13-ந்தேதி – சங்கரன் கோவில்.

14-ந்தேதி – காலை தூத்துக்குடி, மாலை 3 மணிக்கு பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் பேசி வைகோ தனது தேர்தல் பிரசாரத்தை முடிக்கிறார்.

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சென்னையில் மோடி, ஜெயலலிதா ஒரே நாளில் (6-ந்தேதி) பிரசாரம் செய்கின்றனர். சென்னையில் நாளை (5-ந்தேதி) நடக்கும் பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தி-கருணாநிதி ஆகியோர் ஒரே மேடையில் பேசுகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 16-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 12 தினங்களே இருப்பதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ஜெயலலிதா & மோடி:

பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி தமிழகத்திற்கு 3 நாட்கள் வருகிறார். அதன்படி 6-ந்தேதி ஓசூர்-சென்னையிலும், 8-ந்தேதி கன்னியாகுமரியிலும், 11-ந்தேதி வேதாரண்யத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் மோடி பேசுகிறார்.

அதில் சிறப்பம்சம் என்னவென்றால், மோடி சென்னையில் 6-ந்தேதி பிரசாரம் செய்யும் அதே வேளையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் சென்னை ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்கிறார்.

கருணாநிதி & சோனியா:

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நாளை (5-ந்தேதி) சென்னை வருகிறார். சென்னை தீவுத்திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், கருணாநிதியும் ஒரே மேடையில் பேசுகின்றனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து ராகுல்காந்தியும், மு.க.ஸ்டாலினும் இணைந்து பிரசாரம் செய்யும் வகையில் பயணத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அகம்