மாற்று திறனாளிகளுக்கு புதிய வசதி

36

இந்தியாவிலே முதன்முறையாக தமிழக தேர்தலில் மாற்று திறனாளிகளுக்காக 17 பிரத்யோக வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது…..

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பல்வேறு வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மாற்று திறனாளிகள் அதிகளவில் உள்ள இடங்களை கண்டறிந்து 17 பிரத்யோக வாக்குசாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் வேட்பாளர்கள் பட்டியல் ப்ரெய்லி மொழியில் இருக்கும். வேட்பாளர்களின் வரிசை எண்ணும் ப்ரெய்லி முறைப்படியே அமைக்கப்படும்.

காதுக்கேளாதவருக்கான தகவல்களை பரிமாற பிரத்யோக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். மாற்று திறனாளிகள் எளிதில் சென்றுவர 11300 சக்கர நாற்காலிகள் இந்த தேர்தலில் அமைக்கப்படும். டெல்லி தேர்தலில் 500 சக்கர நாற்காளிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அகம்