மசாலா முட்டை தோசை

245

தேவையான பொருட்கள்:-

தோசை மாவு

முட்டை ———————-4
வெங்காயம் ——————1
குடை மிளகாய் ————–1 சிறியது
பச்சை மிளகாய் ————–2
பூண்டு பற்கள் —————-4
மஞ்சள் தூள் —————–டீஸ்பூன்
மிளகாய் தூள் —————-டீஸ்பூன்
மிளகு தூள் ——————-சிறிதளவு ( விருப்பபட்டால் )
உப்பு தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு

செய்முறை:-

முதலில் வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய், பூண்டு பற்கள் இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

மிளகு தூளில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பௌலில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு இவற்றை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கலந்து அதிலேயே பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், கொத்தமல்லி தழை மற்றும் முட்டையையும் உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

தோசைகல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் தடவி தோசை ஊற்றி பாதி வெந்ததும் முட்டை கலவையை அதன் மேல் பரவலாக ஊற்றி மூடி போட்டு 2 நிமிடம் வேகவிட்டு மூடியை திறந்து தோசையை திருப்பி போட்டு நன்றாக வெந்ததும் தேவையானால் மேலே மிளகுதூள்,உப்பு கலவையை தூவி பரிமாறவும.

இந்த தோசைக்கு தொட்டு சாப்பிட எதுவும் தேவைபடாது.

இந்த மசாலா முட்டை தோசையை சுருட்டி இரண்டாக வெட்டி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்பு:– குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் போது காரத்தை பார்த்து சேர்த்துக்கொள்ளவும்.

அகம்