MLA பேட்டியால் புதுசர்ச்சை

81

நான் 1983-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது ரூ.30 ஆயிரம் செலவு ஆனது. அதுவும் மக்களிடம் நன்கொடை வாங்கி செலவு செய்தேன்.

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் ரூ. 11.50 கோடி செலவு செய்தேன். இவ்வாறு செலவு செய்ய வேண்டுமென்றால் ஒன்று ஊழல் செய்து பணம் திரட்ட வேண்டும். அல்லது சொத்துக்களை விற்க வேண்டும். இல்லை இரண்டையும் செய்ய வேண்டும்.

இன்று அரசியலில் பணம் தான் முக்கியம் என்ற நிலை இருக்கிறது. இது தவறுதான். மக்களும், பணம் வாங்குவது தப்பில்லை என்று நினைக்கிறார்கள். அரசியல்வாதிகளும் செலவு செய்து பணத்தை மீண்டும் திரட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல.

இவ்வாறு கூறி இருப்பது ஆந்திர மாநில சபாநாயகராக இருப்பவர் கோடல சிவபிரசாத ராவ். இவர் குண்டூர் மாவட்டம் சந்தனபள்ளி தொகுதியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி சார்பில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆந்திர சபாநாயகரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ.25 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் கோடல சிவபிரசாத ராவ் ரூ.11.50 கோடி செலவு செய்தாக கூறி இருப்பது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

இதற்கு ஆந்திர மாநில வக்கீல்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அவர்கள் கோடலா சிவபிர சாத ராவ்வின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். இதுபோல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

-அகம்