வெங்காய-தக்காளி கறி

43

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் ——————5
தக்காளி பேஸ்ட் ——————– 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு பற்கள் ————————5 (விருப்பபட்டால் )
மஞ்சள் தூள் ————————-1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் ————————1 டீஸ்பூன்
தனியா தூள் ————————–1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.

தாளிக்க :

எண்ணெய் —————————1/4 கப்
கடுகு ————————–——-1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு ———————1டீஸ்பூன்
கருவேப்பில்லை சிறிதளவு.

செய்முறை :

முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கி வைத்துக்கொள்ளவும் .

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கடுகு வெடித்து, உளுத்தம் பருப்பு சிவந்ததும் நசுக்கி வைத்த பூண்டை சேர்த்து வதக்கி பின் நறுக்கி வைத்த வெங்காயம், மற்றும் தக்காளி பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

வெங்காயம் ,தக்காளி பேஸ்ட் இரண்டும் கலந்து நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைத்து பின் மூடியை திறந்து மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை சுருள வதக்கி இறக்கவும்.

செய்வதற்கு சுலபமான மிகவும் சுவையான வெங்காய தக்காளி கறி சுவைக்க தயார்.

இந்த வெங்காய தக்காளி கறியை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் தயிர் சாதத்துடன் சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்.

எண்ணெய் அதிகம் சேர்த்து செய்வதால் நீண்ட தூர பயணங்களுக்கும் எடுத்து செல்ல ஏற்றதாக இருக்கும் .

குறிப்பு :- தக்காளி பேஸ்ட் கிடைக்காதவர்கள் நன்கு பழுத்த பெரிய தக்காளியை நறுக்கி சேர்த்தும் செய்யலாம்

அகம்