பாசி பருப்பு, பச்சை மிளகாய் முறுக்கு

67

தேவையான பொருட்கள் :

பாசி பருப்பு ————1/4 கப்
பதபடுத்தபட்ட
அரிசி மாவு ———– தேவையான அளவு
பச்சை மிளகாய் —— காரத்திர்க்கேற்ப்ப
வெண்ணை ————1டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் ———-1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:

முதலில் பாசிபருப்பை கழுவி அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்து எடுத்து நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அரைத்து எடுத்த பாசிபருப்பு ,பச்சை மிளகாய் கலவையில் தேவையான அளவு அரிசி மாவு, உப்பு, எள், உருக்கிய வெண்ணை சேர்த்து தேவையானால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக முறுக்கு மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்து வைத்துள்ள மாவை விருப்பமான அளவில் முறுக்குகளாக பிழிந்து காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

இந்த பாசி பருப்பு, பச்சை மிளகாய் முறுக்கை மாலை வேலையில் காபியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :– பச்சை மிளகாயை அவரவர் ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

-அகம்