பாசிப்பருப்பு ஸ்பான்ஜ் இட்லி ( இனிப்பு )

32

தேவையான பொருட்கள் : –

பாசிப்பருப்பு —————1 கப்
பச்சரிசி ——————–1/4 கப்
சர்க்கரை ——————-1 கப்
தேங்காய் துருவல் — —-1/2 கப்
பேக்கிங் சோடா ———–2 சிட்டிகை
வெண்ணிலா எசென்ஸ் —3 சொட்டு
ஏலக்காய் பொடி – ———-1/4 டீஸ்பூன்
நெய் ————————-2 டீஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை :-

பாசிப் பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஒரு மணிநேரம் ஊற வைத்து மைய அரைக்காமல் சற்று கொரகொரப்பா அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி , பேக்கிங் சோடா, வெண்ணிலா எசென்ஸ், உப்பு, நெய் சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து மாவை மீண்டும் நன்றாக கலந்து ஒரு நெய் தடவிய தட்டிலோ (அ ) சிறிய கேக் கப்களிலோ ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து நன்றாக வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

இந்த இட்லி சாப்பிடுவதற்கு கேக் சாப்பிடுவது போல மிக மிக சுவையாக இருக்கும்.

இந்த பாசி பருப்பு ஸ்பான்ஜ் இட்லியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் (அ ) பள்ளி விட்டு வந்ததும் சூடாக செய்தும் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மேலே சிறிதளவு நெய் தடவி கொடுக்கலாம்.

குறிப்பு :- இந்த இட்லி மாவில் ஒன்றிரண்டாக உடைத்த முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து செய்தால் இன்னும் ருசியாக இருக்கும்.

-அகம்