கேரட், முட்டைகோஸ் பொரியல்

111

தேவையான பொருட்கள்:-

துருவிய கேரட் ———————-1 கப்
துருவிய முட்டைகோஸ்————11/2 கப்
வெங்காயம் ————————–1
பச்சை மிளகாய் ———————-3
பூண்டு ———————————4பல்
தேங்காய் துருவல் ——————- 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் —————————1/4 டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு.
கருவேப்பில்லை சிறிதளவு.

தாளிக்க:-

கடுகு ———————————–1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு ———————–1 டீஸ்பூன்
எண்ணெய் —————————–2 டீஸ்பூன்

செய்முறை:-

கேரட்டை நன்றாக கழுவி தோல் சீவி துருவி வைத்துக்கொள்ளவும்.

முட்டைகோசை துருவி நன்றாக கழுவி நீரை வடித்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ளவும்.

பூண்டை நசுக்கி வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கடுகு பொரிந்ததும் நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி மஞ்சள் தூள் சேர்த்து துருவிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து தேவையான அளவு உப்பையும் தூவி நன்றாக கலந்து மூடி போடாமல் பதமாக வேக வைத்து எடுத்து கடைசியாக தேங்காய் துருவல்,கொத்தமல்லிதழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.

இந்த சுவையான கேரட், முட்டைகோஸ் பொரியலை சாம்பார் ,ரசம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் .

குழந்தைகளுக்கு இந்த பொரியலை இரண்டு ப்ரெட் துண்டுகளுக்கு நடுவில் வைத்து டோஸ்ட் செய்து லஞ்ச்பாக்ஸில் வைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்பு :- குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் பச்சை மிளகாயை தவிர்த்து விடவும்.

முட்டை கோஸ் வேகும் பொழுது நீர் விடும் என்பதால் இந்த பொரியலுக்கு நீர் சேர்க்க வேண்டியது இல்லை.

அகம்