ரசனை என்னும் ஒரு புள்ளியில் – பகுதி 2

70

மழுபடியும்

மனிதன் நாகரிகமாக வாழத்தலைப்பட்ட கற்காலம்தொட்டே முதலே சுய சவரம் செய்து கொள்ளும் பிரயர்த்தனங்களும் ஆரம்பித்துவிட்டன. ஆதி மனிதன் தன் கண்ணுக்கு வெளிச்சம் தட்டுப்படாத நேரத்தில் எல்லாம் கையில் அகப்பட்ட ரோமங்களைப் பிய்த்து வீசுவதைத்தன் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தான். பின் சுண்ணாம்புக் கட்டிகளையும், கிலிஞ்சல்களையும் துணையாகக் கொண்டு கொத்தாக முடியை வேரோடு பிடுங்கத் தொடங்கினான். அவற்றைக் கூர் தீட்டி அதற்காக பயன்படுத்தினான். அச்சமயம் உடலில் ஏற்பட்ட தழும்புகளை இயற்கையாகச் செடிகளிலிருந்து தயாரித்த சாயங்களால் விதவிதமாக வண்ணம் தீட்டி மறைத்தான். அப்படித்தான் டாட்டூ கலாச்சாரம் உருவானது. பெண்களுக்கும் உடம்பிலும், முகத்திலும் ரோமங்கள் முளைத்தன. ஆனால் அவர்கள் தழும்புகளையோ, முடியை நீக்கியதற்கான தடயத்தையோ மற்றவர் பார்க்கும்படி விட்டுவைக்க விரும்பவில்லை.

அதனால் நீராடும்பொழுதே மயிர் நீக்கும் தன்மையுடைய மூலிகைச் சாறுகளை அதன் மீது தடவியோ, தீயினால் பொசுக்கியோ தன் உடல் முடியை அகற்றுவதில் வல்லவர்களாக இருந்தனர். அதனால் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சியடையும்போது சேவலிடமிருந்து கோழியை வேறுபடுத்திக்காட்ட கொண்டை உருவானதைப்போல், ஆண் மயிலுக்கு நீண்ட தோகை உண்டானதுபோல், ஆண்சிங்கத்திற்கு மட்டும் பிடரியில் மயிர் இருப்பதைப்போல், ஆண்களுக்கு உடல்முழுவதும் ரோமம் இருப்பது என்பதும், பெண்களுக்குநீண்ட கூந்தல் உள்ளது என்பதும் மரபானது.

2-2கலியுகத்தின் துவக்கத்தில் பார்பரிடம் போக முடியாதவன் பார்பேரியன் என்கிறது பண்டைய ரோம சாம்ராஜ்ஜிய மக்கள்தொகை கணக்கெடுப்புக் கல்வெட்டுச் சான்றுகள். சிஸிலித் தீவிலிருந்து நாவிதர்களை முதன்முதலில் ஒருபெருஞ் செல்வந்தர் அழைத்துவந்தார்.மேட்டுக்குடி மக்கள், குடும்ப மருத்துவரைப்போல் ஒரு நாவிதரைத் தன் குடும்பத்துடன் சுவீகரித்துக்கொண்டனர். ஏனென்றால் அதுவரை 21 வயது நிரம்பிய ஓர் ஆணின் முதல் சவரம் செய்யும் சடங்கை பெண்களுக்கு நடத்தும் மஞ்சள் நீராட்டு விழாபோல் வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே என்ற ரீதியில் விமர்சையாகக் கொண்டாடியவர்கள் ரோமர்கள். தத்துவ ஞானிகளும், போர் வீரர்களுக்கும் மட்டும் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்து.

சிஸிலி நாவிதர்களுக்கு இரும்புக் கத்திகளால் வலி தெரியாமல் சவரம் செய்வதற்கு சவர்க்காரமோ எண்ணையோ தேவைப்படவில்லை. அவர்கள் எளிதில் சாணம்பிடிக்கமுடியக்கூடிய எக்குக் கத்திகளை உபயோகித்தனர். சவரத்தின்போது ஏற்பட்ட சிறுகாயங்களில் நறுமணம் கமழும் களிம்புகளையும், சிலந்தி வலையையும் ஒன்றாகப் பிசைந்து தயாரிக்கப்பட்ட பசையால் இலகுவகாகத் தடவினார்கள். ஆண்களுக்கு அது ஒரு சுக அனுபவமாக இருந்தது.

பண்டைய எகிப்தியர்களிடம், குறிப்பாக உயர்குடி ஆண்கள் உடம்பில் உள்ள ரோமக் கால்களை வேரோடு நீக்கிவிடும் வழக்கமிருந்து. விசேஷ நாள்களில், பொது நிகழ்வுகளின்போது மட்டும் ஒட்டு தாடி அல்லது டோப்பா வைத்துக்கொள்ளும் வழக்கமுடையவர்களாக இவர்கள் இருந்தனர். இந்தக் காலத்தில் புதைக்கப்பட்ட எகிப்திய சடலங்களை(மம்மி) தோண்டி எடுத்து ஆராய்கையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவுஉடைய, பெரிய கல்லறைகளுடைய ஆண்களின் சவப்பெட்டியில் அவர்களுடைய சவரக்கத்தியும் தோல்ப்பையோடு சுற்றிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்து. தாடியுடன் உள்ள அல்லது சவரக்கத்தி உடன் இல்லாத சடலங்கள் கொள்ளைக்காரர்களுடையதாகவோ அல்லது சமூகத்தில் சரியான அங்கீகாரம் இல்லாதவர்களுடையதாகவோ இருந்திருக்க வேண்டும் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

பிற்காலத்தில் ரோம வம்சாவழி ஆங்கிலேயபிரபுக்களும், நீதிபதிகளும் சிகையை உபயோகிக்கும் மரபு வழக்கத்திற்கு வந்தது. ரோம நாகரிகத்தில் முடிதிருத்தகம் சமதர்ம் நிலவுமொரு இடமாக இருந்தது. முன்பு கூறியத்தைப்போல் சொந்தமாக ஒரு நாவிதரை வீட்டோடு பணியமர்த்து வசதிபடைத்தவர்கள்கூட வாரம் அல்லது மாதம் ஒருமுறை நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ள, வெகுஜனத்தோடு சகஜமாகப்பழக முடி திருத்தும் கடைக்கு வருவது உண்டு.

2-3ஆண்கள் தான் சவாரி செய்த குதிரைகளை உற்ற நண்பனாகவும், உயிர்த் தோழியாகவும் பாவித்தனர். அதனாலேயே ஆண் குதிரைகளின் பிடரியை நீளமாகவும், பெண் குதிரையின் வாலை(போணி டைல்) நீளமாகவும் இருக்கும்படிபராமித்தனர். அந்த நட்பின் வெளிப்பாடாகத்தான் தன் போர்வாள்களின் கைப்பிடியையும், வெங்கல யுகத்தில் தன் சவரக்கத்தியின் கைப்பிடியையும் ஆண் குதிரையின் பிடரியைப் போல் வடிவமைத்தனர். மாவீரன் அலெக்சாண்டருக்கு அவரது குதிரை ப்யூசிப்பேலஸுடனான பினைப்பு உலகறிந்த்து.

ரோமப் பேரரசர் ஜூலியஸ் ஸீஸர் தன் கிரேக்க முன்னோடியான அலெக்சாண்டரை அடியொற்றி தன் படையில் உள்ள அனைத்து வீரர்களையும் தினமும் சவரம் செய்துகொள்ளும்படி கட்டளையிட்டார். ஏனெனில் வரலாறுப் பதிவுகளின்படி மாவீரன் அலெக்ஸாண்டரே சவரம் செய்வதில் வேற்றுமைபாராட்டாதவராக இருந்தார். தன் படை வீரர்கள் அனைவரும் சவரம் செய்து கொள்வதன் மூலம் எதிரியிடம் சிக்கிக்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையில், நீண்ட கேசமும், தாடியும் அவர்களை அதிக சித்திரவதைக்கு உள்ளாக்க வாகாக அமைந்துவிடும். தவிர தினமும் சவரம் செய்தல் சோம்பலைப் போக்கும், சுய மதிப்பைக் கூட்டும், யுத்த நேரத்தில், முடியைப் பராமரிக்கும் அவசியம் இராது. இவை எல்லாம் அவர் உதிர்த்த பொன்னான காரணங்கள். ஆனால் பாம்பின் கால்பாம்பறியும் என்பதைப்போல் சீஸருக்கு அதிலிருந்த போர் சூட்சமம் புரிந்தது.

2-4கண்டம் கடந்து நாடுபிடிக்கும் அடங்கா ஆசையுடன் தன் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே போகும் ஒருவனுக்கு தன் எதிரியைப் பக்கத்திலேயே வைத்திருக்கக்கூடிய நிர்பந்தம் ஏற்படலாம், தனக்கே தெரியாமல் அவன் பாம்பிற்கு பால் வார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். போர்க்களத்தில் தன் வீரர்களுக்கு உற்சாகமூட்டும்வண்ணம் தீக் கொப்பளிக்க கர்ஜிப்பார் அலெக்சாண்டர். சுற்றி வருகையில் ஒவ்வொருவீரனின் முகத்தையும் பார்ப்பார். தாடி என்ற கவசம் இல்லாதவனின் ஒவ்வொரு முக பாவனையையும் தூரத்திலிருந்தேகூட,அதிக வெளிச்சம் இல்லாதபோதுகூட துல்லியமாக அவரால் மதிப்பிட முடியும். தன் நிழலைக்கூடச் சந்தேகிக்க வேண்டும் என்பதுதான் ஸீஸர் அலெக்சாண்டரிடமிருந்து மானசீகமாகக் கற்றுக்கொண்ட பாடம்.

அலெக்ஸாண்டர் சுய சவரம் செய்யும் பழக்கம்உடையவராகயிருந்தார். ஆனால் தன் பிடரியை அவர் பராமரித்தார். அதை எக்காலத்திலும் நான் எதிரியிடம் பிடிபடமாட்டேன், நானும் என் புரவியைப் போல் கட்டுக்கடங்காதவன் என்பதற்கான குறியீடு அது. அதனால்தான் அந்தக் காலத்தில் ஒருசில தளபதிகளைத் தவிர யாரும் மன்னருக்கு இணையாக கூந்தல் வளர்க்கக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. போர்அடிமைகளை கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கழுவேற்றுவது அவனைத் தூக்கிலிட்டதற்கு சமம். ஆனால் அலெக்சாண்டர் சொல்லாத்தயும் ஸீஸர் செய்தார். தன் படை வீரர்களைப் போலவே தானும் தன் முடியை க்ராப் வெட்டிக்கொண்டார். அது நாம் எதிரியிடம் சிக்கி விடுவோமோ என்ற எச்சரிக்கயுனர்வால் எடுத்த முடிவல்ல. நான் உங்களில் ஒருவன் என்ற பிம்பத்தை தன் படையாளரிடம் உருவாக்கிய ராஜதந்திரம். இவை எல்லாம் கிருத்துவிற்கு முன்.

2-5 Perret-Lorenzi17ஆம் நூற்றாண்டில்பிரன்சு நாவிதர் ஜீந் ஜாக்குவஸ் பெர்ரெட் என்பவர் ‘ சுய சவரம் செய்யும் கலை’ என்ற அழகியல்குறித்த முதல் புத்தகத்தைப்பிரசுரித்தார். அவர் டானா வடிவிலான மரக் கைப்பிடி ஒன்றைச் சவரக்கத்தியுடன் இனைத்திருந்தார். சுமார் 18ஆம்நூற்றாண்டில்தான் முதல் ஸ்டீல் சவரக்கத்தி தோன்றியது. ஆனால் அதைப் பக்கவாட்டில்தான் பிடித்தமழிக்க முடியும்.

1847 இல் வில்லியம் ஹென்ஸன் என்பவர் செங்குத்தாக பிடித்து சவரம் செய்யும் கத்தியை வடிவமைத்தார். அதை அடுத்தகட்ட முன்னேற்றமாக அமெரிக்காவின் கேம்ஃப்க் சகோதரர்கள் ஒருபக்க பிளேட் சவரக்கத்தியை உருவாக்கினார்கள். ஆனால் அவற்றை அடிக்கடி கழற்றி பட்டைத் தீட்ட வேண்டியிருந்தது. இந்தக் குறைகளையெல்லாம் நிவர்த்திசெய்யும் வண்ணம் பிறந்துதான் ஜில்லட் சவரக்கத்தி. ஆனால் இந்தச் சமகாலத்தில் இந்தியமன்னர்கள் எப்படியிருந்தார்கள்? என்ற ஆர்வம் உங்களிடம் தொற்றிக் கொண்டுவிட்டதா?

(அதற்கான விடை அடுத்த இதழில்)