ரசனை என்னும் ஒரு புள்ளியில் – பகுதி 3

68
Agam-Magazine

இந்திய chola 1மன்னர்கள் பெரும்பாலும் ராணிகளுக்கிணையாக சிகையலங்காரத்தில் நாட்டம்கொண்டவர்களாயிருந்தார்கள். ஆனால் அவர்கள் தன் முடியை கொண்டையிட்டு, தலைப்பாகை அணியும் வழக்கம்இருந்தது. பெரிய மீசை அல்லது நன்கு பராமரிக்கப்பட்ட தாடியுமுடையவர்களாக அவர்கள்இருந்தார்கள். கிருத்துவிற்கு பிந்தியகாலத்தில், கடல்வழிப் பயணங்களும், பண்டமாற்றும் அதிகரித்த காலகட்டத்தில் ரசனை மாற்றமும் இன்றியமையாததாக இருந்தது.கி.பி 100களில் ரோமச் சக்கரவர்த்தி ஹேட்ரியன்( நீரோ மன்னனைப்போல் க்ரேக்க பாரம்பரியத்தில் அதிக நாட்டம்கொண்டவன்) மீண்டும் தாடியுடன் தோற்றமளிக்கும் வழக்கம் கொண்டிருந்தான். அதையடுத்து காண்ஸ்டண்டைனுக்குமுன்னால் வந்த எல்லா ரோம மன்னர்களும் தாடி வைத்த ஒரு கல்வெட்டையோ அல்லது ஓவியத்தையோ தங்களது வரலாற்றுப் பதிவாகவிட்டுச் சென்றார்கள்.

கி.பி 840ல் ஸ்பெயின் நாட்டில்தான் உலகின் முதல் அழகியல் கலையைப் பயிற்றுவிற்பதற்கென்றே பிரத்தியேகமான ஒரு கல்வி நிறுவனம் பாக்தாதைச் சேர்ந்த ஒரு பிரபல பாடகரால் தோறுவிக்கப்பட்டது. இங்கே பலநாடுகளிலிருந்து வந்த மாணவர்கள் எப்படி வேண்டாத முடியை அகற்றுவது, வாசனை திரவியங்களைத் தயார் செய்வது, பற்பசை தொடங்கி சகலமும் எப்படி உற்பத்தி செய்வது, உபயோகிப்பது போன்றவற்றில் வல்லுனரானார்கள்.

கி.பி 1066ல் ஓர் வினோதனாமான போர் உக்தியை நாற்மண்டி மன்னன் வில்லியம் இங்கிலாந்துக்கெதிரான போரில் மேற்கொண்டான். தன் படைவீரர்கள் அனைவரையும் முன் மண்டையை முழுதாக மழித்து, பின் குடுமியுடன், சாதாரண உடையில் முன்னேறிப்போகச் சொன்னான். இங்கிலாந்தின் ஹரால்ட் மன்னனின் ஒற்றர்களுக்கு கண்கண்ட தூரம்வரை எதிரியின் படைகள் எதுவும் தென்படவில்லை. அதனால் சில பாதிரியார்கள் அல்லது பிக்குக்கள்தான் அங்கே கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் துப்பு கூறினர்.

ஏனென்றால் சமகாலத்தில் புத்த பிக்குக்கள் போன்ற முற்றும் துறந்தவர்கள்தான் அப்படித் தோற்றமளிப்பார்கள். ஜைன மதத்தில் துறவுவாழ்க்கைக்கு நியமனம் செய்தவர்கள் ஒவ்வொரு முடியாக ரோமக்கால் வரை கையாலேயே பிய்த்து எடுக்கும் சடங்கு நடைமுறையில் இருந்தது. நீ என்ன பெரிய பிடுங்கியா? என்பதற்கு நீ என்ன அவ்வளவு மன வலிமையும் உடல் திடமும்கொண்ட முனியா என்று பொருள். இன்று நாம் அந்தப் பதத்தைப் பயன்படுத்துவது வேறு அர்த்தத்தை மனதில் கொண்டு. தப்புக் கணக்குப் போட்ட ஹாஸ்டிங்கின் படை மண்ணைக் கவ்வியது.

2-7போன பகுதியில் பார்த்ததுபோல தினமும் சவரம் செய்தல் என்பது சுறுசுறுப்பு மற்றும் சுத்தத்தின் அடையாளம் என்று நம் ஆழ்மனதில் வெற்றிகரமாகப் பதியவைத்து தங்கள் பொருளை சந்தைப்படுத்திவிட்டார்கள். 7’0 க்ளாக் என்ற பெயரிலும் இந்தியாவில் ஜில்லட்சவரக்கத்திகளே கோலோச்சியுள்ளன. ஜில்லட்டுக்கு நிகரான ஒரு இந்திய பிளேட் இல்லை. வில்கின்ஸன் சுவார்டும் ஜில்லட்டுடன் இனைந்து இந்திய சந்தயைப் பொருத்த அளவில் தயாரிப்பில் ஈடுபடுகிறது. அதனால் அன்றாடம் ஒவ்வொரு நாள் நாம் சவரம் செய்வதன் மூலம் அந்த விற்பனையினால் கிடைக்கும் உரிமத்துக்கான வருவாயின் மூலம் அமெரிக்காவிற்கு நாம் ஒரு வகையில் கப்பம் கட்டிக்கொண்டுள்ளோம் என்றால் அது மிகையல்ல.

மாற்று என்பது சிறிய வடிவ மாற்றங்களுடன் நாமும் ஒரு பிளேடைத் தயாரித்து சுதேசி பிளேடுகளையே வாங்குங்கள் என்று காந்திய வழியில் போராடுவதுதான். ஆனால் இன்று பாரம்பரியத்தை மீட்டெடுக்கிறோம் என்ற பேரில் மீண்டும் தாடி வளர்க்கும் கலாச்சாரம் இந்தியாவில் பரவலாகி வருகிறது.கற்காலத்துக்கு முந்தைய காலத்தில் தோன்றிய இந்தியக் கடவுள்களின் கையில் மழு எனும் கோடாரி போன்ற எஃகினாலான ஆயுதம் உள்ளது. ஆனாலும் நம் மன்னர்களும், அவதாரப் புருஷர்களும்தாடியுடனேயே தோற்றமளித்தனர்.ஆகவே உலகின் முதல்

நாகரிகங்கள் தோன்றிய சிந்து சமவெளி பாரம்பரியத்தில்வ ந்தவர்களாயினும் தாடிதான் நம்அடையாளம். ஹரப்ப்பா, மொஹஞ்சதாரோவில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த மரப்பாச்சி பொம்மைகளில் உள்ளமனிதர்கள்கூட தாடியுடனே தோற்றமளிக்கின்றனர் என்று நிறுவ நடந்துகொண்டிருக்கும் முயற்சிகள் ஒருபுறமிருக்க. தாடிவளர்க்க ஏதுவான எண்ணை, மெழுகுப்பசை, மற்றும் சோப்பை ‘USTRAA’(சமஸ்கிருதத்தில் உஸ்திரா என்றால் சவரக்கத்தி) என்ற நிறுவனம்பெரிய அளவில் வெற்றிகரமாகச் சந்தைப்படுத்திவருகிறது. கூடிய சீக்கிரம் பதஞ்சலி இந்தச் சந்தையில் குதித்தால்மேலும் பிராக்டர் & காம்பில் மற்றும் ஹிந்துஸ்தான் லீவர் போன்ற நிறுவனங்களின் இந்தியச் சந்தைக்கு மேலும் நெருக்கடியுண்டாக்கலாம். ஆனால் அவர்கள் தயாரிப்பது மழு போன்ற கூரான இந்திய சவரக்கத்தியை அல்லதுதாடியைப் படியவைக்கும் உபகரணங்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே உலகின் மற்ற நாகரிகங்கள் எப்படி நம் ரசனையை மெல்ல மெல்ல மாற்றிவந்துள்ளன என்பதை அடுத்த பகுதியில் ‘ ரோம் நகரின் ரோமிங் சிம்மா நாம்?’ என்ற கட்டுரையில் பார்ப்போம்.