ரவா-கேரட் லட்டு

46

தேவையான பொருட்கள் :-

பாம்பே ரவை ————–2 கப்
தேங்காய் துருவல் ——–1 கப்
கேரட் துருவல் ————1 கப்
சர்க்கரை ——————-2 கப்
ஏலக்காய் தூள் ————1/2 டீஸ்பூன்
நெய் ————————2 டேபிள் ஸ்பூன்
உடைத்த முந்திரி பருப்பு சிறிதளவு.

செய்முறை:-

முதலில் வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை போட்டு நிறம் மாறாமல் வறுத்தெடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் மீதியுள்ள நெய்யை விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுத்து வைத்துக்கொண்டு தேங்காய் துருவல், கேரட் துருவல், சர்க்கரை, ஏலக்காய் தூள் இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கிளறி கடைசியில் முன்பே வறுத்து வைத்துள்ள ரவையையும், முந்திரி பருப்பையும் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விடவும்.

கலவை சிறிது ஆறியதும் கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதே லட்டுகளாக பிடித்து வைக்கவும்.

நல்ல கலருடன் கூடிய, சுவை மிகுந்த குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரவா – கேரட் லட்டு சுவைக்க தயார்.

குறிப்பு :-

கேரட்டிலும் இனிப்பு தன்மை இருப்பதால் சர்க்கரையை அவரவர் ருசிக்கேற்ப பார்த்து சேர்த்துக்கொள்ளவும்.

-அகம்