கேரட், ரெட் கேப்சிகம் சட்னி

69
Red-Capsicum-Chutney

தேவையான பொருட்கள்:

சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட் —– 1/2 கப்
சிறிய சிகப்பு குடை மிளகாய் ————1
வெங்காயம் ——————————-1
பூண்டு பற்கள் —————————–5
காய்ந்த மிளகாய் ————————–காரத்திற்கேற்ப
புளி —————————————–சிறிதளவு

உப்பு தேவையான அளவு.

தாளிக்க :-

எண்ணெய் —————5 டேபிள் ஸ்பூன்
கடுகு ———————1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு ——–1/2 டீஸ்பூன்
கருவேப்பில்லை——–சிறிதளவு

செய்முறை :-

முதலில் குடை மிளகாய் , வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைத்து கொள்ளவும் .

அடுப்பில் வாணலியை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள, வெங்காயம், சிகப்பு குடை மிளகாய், கேரட் துண்டுகள் பூண்டு ,காய்ந்த மிளகாய் ,புளி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைத்து அதனுடன் உப்பையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு சட்னி பதத்தில் அரைத்து எடுக்கவும்.

மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து மீதியுள்ள 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து கடுகு வெடித்து, உளுத்தம் பருப்பு சிவந்ததும் சட்னியில் கலந்து இட்லி , தோசையுடன் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :-  காரம் மற்றும் புளிப்பு சுவையை அவரவர் ருசிக்கேற்ப கூட்டியோ (அ) குறைத்தோ சேர்த்துக்கொள்ளலாம் .

அகம்