ஸ்பிரிங் ஆனியன் கறி

43

தேவையான பொருட்கள்:-

ஸ்ப்ரிங் ஆனியன் ——————–2 கட்டு
பெரிய வெங்காயம் ——————-1
தக்காளி பழம் ————————-1
பூண்டு பற்கள் ————————-5
மஞ்சள் தூள் ————————–1/4டீஸ்பூன்
மிளகாய் தூள் ————————-1/2 டீஸ்பூன்
மல்லி தூள் ————————––1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.

தாளிக்க ;-
எண்ணெய் —————————3 டேபிள் ஸ்பூன்
கடுகு ———————————1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு ——————–1 டீஸ்பூன்
கருவேப்பில்லை சிறிதளவு.

செய்முறை:-

முதலில் ஸ்ப்ரிங் ஆனியன், வெங்காயம், தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பூண்டு பற்களை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் நறுக்கி வைத்த காய்கறிகள், மசாலா தூள்கள், உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக காய்த்தும் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து நசுக்கிய பூண்டு, கருவேப்பில்லை போட்டு வதக்கி முன்பே வேகவைத்து எடுத்து வைத்துள்ள ஸ்ப்ரிங் ஆனியன் கலவையை சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கவும்.

செய்வதற்கு எளிதான இந்த ஸ்ப்ரிங் ஆனியன் கறியை சப்பாத்தி மற்றும் பூரியுடன் சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

அகம்