தெரசா மே – இரும்பு பெண்மணியா?

86

இன்று உலகம் முழுவதுமாய் கவனிக்கப்படும் முக்கிய பர்சனாலிட்டி. இங்கிலாந்தின் புதிய பெண் பிரதமர் தெரசா மே அவர்கள் தான்.! இவர் இங்கிலாந்தின் தாட்சருக்கு அடுத்து இரண்டாவது பெண் பிரதமரும் கூட!

நாகரிக உடை உடுத்துவதிலும், முடிவுகளை விரைந்து செயல்படுத்துவதிலும் மிகச் சிறந்த நபராக இவர் பார்க்கப்படுகிறார். தனது காலணிகளை தேர்ந்தெடுப்பதில் கூட மிக கவனம் செலுத்தக் கூடியவரென்று இங்கிலாந்து பிரஜைகள் சொல்கிறார்கள்!

போட்டிகளே இல்லாமல் நல்ல வாய்ப்பாக வந்து அமைந்தது இந்த பதவியென்றால் அது சற்றும் மிகையாகாது.

இங்கிலாந்தின் இவருக்கு முன், பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் சிறந்த நிர்வாகியாக தன்னளவில் காட்டிக் கொண்டாலும், மக்களுக்கு அவரின் மீதான வெறுப்பும் குறைந்ததில்லை என்றேச் சொல்லலாம்.

அமெரிக்க அதிபரின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டதாகவும், வளைகுடா நாடுகளின் விஷயத்தில் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முளைத்து வருகின்றன.

இங்கிலாந்து வாழ்  குடிமக்களின் வேலை வாய்ப்புகள் ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து இணைந்த பிறகு, பறிப்போனதாக மக்கள் உணரத் தொடங்கினார்கள். இதனால் போராட்டாங்களும் கருத்து மாச்சரியங்களும் வெளிப்படத் தொடங்கின!

ஐரோப்பா யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலு பெறத் தொடங்கியது. இது சம்பந்தமான பொது வாக்கெடுப்பு நடத்தும் சூழலுக்கு கன்சர்வேட்டிவ் அரசு நிர்பந்தத்திற்கு ஆளானது. வாக்கெடுப்பில் 54 % மக்கள் விலகல் முடிவிற்கு ஆதரவாகவும் 46% மக்கள் எதிராகவும் முடிவளித்தனர்.

இந்த முடிவை ஏற்றுக் கொண்ட டேவிட் கேமரூன் தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இவருக்கு பிறகு, யார் புதிய பிரதமர் என்ற போட்டியில், எரிசக்தி துறை அமைச்சராக இருந்த ஆண்ட்ரியா லீட்சமும், உள்துறை வகித்த தெரசா மே அவர்களுக்கும் போட்டி சூழல் ஏற்பட்ட நிலையில் கன்சர் வேட்டிவ் கட்சியின் நிர்பந்த சூழலில் ஜுலை 11ம் தேதி ஆண்ட்ரியா லீட்சன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

தெரசா மே அவர்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது. 13 ம்தேதி முறைப்படி இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்களின் ஆசியுடன் பதவியை பெற்றுக் கொண்டார்.

THERESA MAY தெரசா மே (வயது 59)

1-10-1956 ல் பிறந்த, தெரசா பிரசியர், பிலிப் மே என்பவரை திருமணம் செய்த பிறகு ”தெரசா மே” வாக பெயரில் மாற்றம் கண்டார்.

1977 -83 கால கட்டத்தில் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஊழியராக பணியில் இருந்து வந்தார். அதன் பிறகும் வங்கித் துறையில் தன் திறமைகள் பல காட்ட முன்னேற்றங்களை கண்ட தெரசா மே 1997ல் முதன் முறையாக எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2010ல் உள்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறையும் அவர் வசம் வந்தது. 2015 ல் மீண்டும் உள்துறை அவர் வசமே கொடுக்கப்பட்டது.

இவர் சிறந்த நிர்வாகியாக இருப்பாரா? என்பதை விட கேமரூன் அவர்களின் நல்ல விசுவாசியாக இருந்தார் என்பது தான் உண்மை.

பெரும்பாலும் அரசியல் வல்லுனர்கள் கேமரூனின் நிழலாகத் தான் செயல்படுவாரென்று தங்கள் கருத்துகளை பதிவு செய்கின்றனர்.

காலம் தான் இவைகளுக்கு நல்ல பதிலை சொல்ல முடியும் என்றாலும், பதவியேற்ற சில நிமிடங்களில் அவருக்கு குவிந்த வாழ்த்துகள், 49 வயது நிரம்பிய ஆபாச படங்களின் நாயகியும், “Smock my bitch up” என்ற இசை ஆல்பம் மூலம் அறிமுகமான மாடல் நடிகை தெரசா மே TERESA MAy என்பவருக்கு போய் சேர்ந்தது என்பது தான் வேடிக்கை!

THERESA MAY – TERESA MAY இருவருக்குமே நாமும் வாழ்த்து சொல்லிவிடுவோம் !

-முகமது பாட்சா