மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை

60

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் பிற்பகல் 12.30 மணியளவில் தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை 130 தலைப்புகளில், 80 பக்கங்கள் கொண்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

* விவசாயக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
* அனைத்து நிலைகளிலும் கல்வி இலவசமாக வழங்கப்படும்.
* வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை.
* உலக வர்த்தக ஒப்பந்தம், உள்நாட்டு தொழில்களை நாசப்படுத்துகிறது. மக்கள்        விரோத கொள்கைகளை மக்கள் நலக் கூட்டணி எதிர்க்கும்.
* தனியார் துறையில் இட ஒதுக்கீட்டுக்காக சட்டத் திருத்தம்.
* உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடி குத்தகை கட்டாயமாக்கப்படும்.
* கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு.
* சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கபட்டுள்ள கடன்கள் ரத்து செய்யப்படும்.
* பட்டியலினத்தோர் துணைத்திட்ட நிதியில், சிறப்பு கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.
* மின்னணுக் கழிவுகளை அகற்ற, மறுசுழற்சி செய்ய நடவடிக்கை.
* மரம் வளர்ப்பதை ஊக்குவிக்க தனி கவனம். கூடுதல் ஊக்க மதிப்பெண்.
* அரசுப் பேருந்து, ஆம்னி பேருந்துகள் கட்டணம் குறைக்கப்படும்.

அகம்