வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன் கவிதைகள்

287

அந்த அடுக்குமாடியின்

நான்காவது தளத்தினருகே

அசையாமல் நிற்கிறது

பவுர்ணமி;

பார்த்துப் பார்த்து

பவுர்ணமி இரவை

வரைந்து கொண்டிருக்கிறது

வீட்டினுள்ளிருக்கும் குழந்தை…

***********

அன்றைய மதியப் பிரிவுக்குப்பின்sand shawdow

இன்றுதான் சந்திக்கின்றன

நம் நிழல்கள்;

அன்றைய வெயில் இன்றில்லை