ஆர்.கே நகரில் பெண் வேட்பாளர்.

78

விடுதலை சிறுத்தைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 11 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவித்துள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆர்.கே.நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் வக்கீல் சிம்லா முத்துசோழன் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து திருமாவளவன் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை சென்னையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “மற்ற தொகுதிகளை போலவே தான் ஆர்.கே.நகர். விடுதலை சிறுத்தைகள் சார்பில் அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்ற வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டோம்.

அதன் அடிப்படையில், மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவியை நிறுத்துகிறோம். மீதமுள்ள 12 வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் சில மணி நேரங்களில் வெளியிடப்படும்” என்றார்.

அகம்