வெற்றிமாறனின் அடுத்த படம்??

83

சமீபத்தில் வெளியான விசாரணை திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. காவல்துறை மற்றும் அரசு இரண்டையும் எந்த வித தயக்கமும் இல்லாமல் தோலுரித்த படம் விசாரணை.

shoes of the dead book

விசாரணைக்கு கிடைத்த எதிர்பாராத இந்த வரவேற்பினால் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து விவசாயிகளின் தற்கொலையை மையமாக கொண்டு ஒரு திரைப்படத்தினை இயக்க இருக்கிறார்.

விசாரணையை போலவே இந்த படமும் 2013ல் எழுத்தாளர் கோட்டா நீலிமா எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த “Shoes of the Dead” என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு வெளிவர இருக்கிறது.

இந்த படைப்பும் வெற்றி பெற உளமாற வாழ்த்துவோம்.

  • அகம்