தொடங்கியது வாக்குப்பதிவு

57

வறுமை, வேலைவாய்ப்பு இல்லாமை, ஊழல் போன்றவற்றை ஒழிக்க முடியாமல் ஆளும் ஆட்சியாளர்கள் தவிக்கும் நிலையில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு தான் இன்று தொடங்கியது.

இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்த ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது புதிய அதிபர், துணை அதிபர், 300 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை பிரதிநிதிகள் சுமார் 18 ஆயிரம் பேரை தேர்வு செய்யவுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வந்தாலும் மக்களின் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு போன்ற உரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில் தற்போதைய அதிபரான பெனிக்னோ அக்வினோ-வும் மக்களின் அதிருப்தியில் இருந்து தப்பவில்லை.

அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்துபேர் அதிபர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்-ஐப்போல் அதிரடிக்கு பேர்போனவரும், டாவாவ் நகர மேயருமான ரோட்ரிகோ டுட்டெர்டேவுக்கு இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அகம்