அகம் ஜோதிடம் வார ராசிபலன்

177
unique-about-your-zodiac
       
கேது இந்த வார கிரக நிலை.

 

25.07.16 முதல் 31.07.16 வரை.

 

சூரி

சுக் புத

  ராகு

குரு

  செவ்

சனி

   

வார இராசி பலன்

மேஷம் : அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் வரையான மேஷ ராசியினருக்கு

இந்த வாரம் உற்சாகமான, வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிதாக வாகனம் வாங்கும் எண்ணம் ஏற்படும். தொழில் நன்றாக நடைபெறும். ஓய்வில்லாமல் உழைக்கும்  நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள், உடன் பணிபுரிபவர்களோடு இணக்கமான சூழல் ஏற்படும். வேலை பளு கூடும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

கல்வி சிறக்கும். புதிய சிந்தனைகள் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே தொடரும். பொழுது போக்கு விசயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்கள் சிறப்படையும்.

ரிஷபம் : கிருத்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம் கொண்ட ரிஷப ராசியினருக்கு

இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். தொழில் நன்றாக நடைபெறும். ரியல் எஸ்டேட், விவசாயம், மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு சிறப்பான பலன்கள் இருக்கும். லாபம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு  ஏற்றமான  வாரம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவி அனுசரித்து செல்வது நலம். வீடு மற்றும் எண்ணம் தோன்றலாம். கல்வி சிறப்படையும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கப்பெறும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் வரையான மிதுன ராசியினருக்கு

இனிமையாக  பேசி  காரியம் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகம் சிறப்பாக  இருக்கும். சிறு தொழில்கள், கைத்தொழில்கள் வெற்றியடையும். வருமானம் அதிகரிக்கும். நண்பர்களுடன் வீண்  வாக்குவாதம் வேண்டாம். அப்பாவின் ஆலோசனையை  கேட்டு செயல்படுவது நலம். வீடு  மனை  சம்பந்தமான பிரச்சனைகள்  ஏற்படலாம். தாய்  மாமன் வழியில் உதவிகள் கிடைக்கப் பெறலாம். பக்கத்து ஊருக்கு வியாபார விசயமாக பயணம் ஏற்படலாம்.

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம் , பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களை கொண்ட கடகராசியினருக்கு

இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக இருக்கும். உத்தியோகத்தில்  பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. செய்தொழில் மேன்மையடையும். கடினமான வேலைளில் உங்கள்  புத்தி கூர்மையால் வெற்றியடைவீர்கள். வீடு மனை வாங்குதல் விற்பனையில் நல்ல பலன் உண்டு. வங்கி சேமிப்பு உயரும். மகிழ்ச்சியான மனநிலை நீடிக்கும். சிலருக்கு திருமணம் நிச்சயம் ஆக அறிகுறிகள் தோன்றும். நண்பர்கள் விசயத்தில் கவனம் தேவை. வீண் விவாதம் தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை.

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் வரையான சிம்ம ராசியினருக்கு

இந்த வாரம் மனதில் சந்தோசம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி வேலையில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். செங்கல் உட்பட கட்டிட உபகரண விற்பனை செய்பவர்கள் லாபம் பெறுவார். பெண் குழந்தைகளுக்கு செலவுகள் ஏற்படும். வீடு  மராமத்து பணிகள் நடைபெறலாம். கணினி செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்கி மகிழலாம். உறவுகளிடம் நல்லுறவு கிடைக்கும். 26.07.16 செவ்வாய்கிழமை காலை 11 மணிவரை சந்திராஷ்டமம் வீண் மனக்குழப்பம் தவிர்க்கவும்.  எதிலும் நிதானம் தேவை.

கன்னி : உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம் வரையான கன்னிராசியினருக்கு

இந்த வாரம் வெற்றிகரமான வாரமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சக பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப்பெறலாம். குடும்பம் மகிழ்ச்சியாகவே இருக்கும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். மனைவியால் வாமனம் கிடைக்கும். எதிரிகளை வெற்றிக் கொள்ளலாம். உணவுக் கட்டுப்பாடு தேவை, ஜீரணக் கோளறு, காதில் நோய் போன்றவை ஏற்படலாம், 26.07.16 செவ்வாய் கிழமை காலை 11 மணிமுதல் 28.07.16 மதியம் 1.45 வரை சந்திராஷ்டமம் வீண் மனக்குழப்பம் தவிர்க்கவும்,  எதிலும் நிதானம் தேவை.

துலாம் : சித்திரை 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் வரையான துலா ராசியினருக்கு.

இந்த வாரம் மிகவும் உற்சாகமான மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும். அரசு உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகம் செழிப்பாக நடைபெறும். தொழில் அமோகமாக நடைபெறும். வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சியான போக்கு நடைபெறும். நீண்ட கால  விருப்பங்கள் நிறைவேறும். அசையும் சொத்துக்கள் வாங்கி குவிக்கலாம். உல்லாச பயணங்கள் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் 28.07.16 மதியம் 1.45 மணிமுதல் 30.07.16 மாலை 4.30 வரை சந்திராஷ்டமம் வீண் மனக்குழப்பம் தவிர்க்கவும். எதிலும் நிதானம் தேவை.

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை வரையான விருச்சிக ராசியினருக்கு

இந்த வாரம் ஒரு வித குழப்பமான மனநிலையாகவே இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். வெளிநாட்டு தொடர்பான வேலைகள் சிறப்பாக இருக்கும்.  சுயதொழில் லாபம் தருவதாக இருக்கும். புதிய கிளைகள் துவங்கும் எண்ணம் ஏற்படலாம். தந்தை வழியில் அனுகூலமான பழங்கள் இருக்கும். வீடு கட்டும் ஆசை அதிகரிக்கும். உஷ்ணாதிக்க வியாதிகள் வரலாம். உஷ்ணத்தை குறைக்கும் உணவு வகைகள், பழங்கள் உட்கொள்ளவும். 30.07.16 மாலை 4.30 முதல் சந்திராஷ்டமம் துவங்குவதால் வீண் மனக்குழப்பம் தவிர்க்கவும். எதிலும் நிதானம் தேவை.

தனுசு : மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரையான தனுசு ராசியினருக்கு

வேலையில் கவனம் தேவை. உயர் அதிகாரிகளிடம் திட்டு வாங்க நேரலாம். வியாபாரத்தில் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். பெண்களால் கஷ்டம், துன்பம் ஏற்படலாம். வீடு மனை வாங்க யோகம் உண்டு. சிலருக்கு பரம்பரை சொத்து கிடைக்கும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். நீண்ட தூர பயணம் இருக்கும். வீண் அலைச்சல் தவிர்க்கவும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4ம் பாதம் முதல் திருவோணம் வரை, அவிட்டம் 1, 2 வரையான மகரராசியினருக்கு

இந்த வாரம் லாபகரமாக இருக்கும். சொந்த தொழில் லாபம் அதிகரிக்கும். தொழில் நிமித்தம் வெளியூர் செல்ல நேரலாம். ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் பெருகும். கூட்டுத் தொழில் நன்கு நடைபெறும். அலுவலகத்தில் மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகாலம் காணப்படும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கப் பெறும். யாருக்கும் கடன்கள் கொடுக்க வேண்டாம். குடும்பத்தினர் எதிர்பார்க்கும் பொருட்களை வாங்கித்தருவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. பிறரிடம் வீண் பேச்சை தவிர்ப்பது நலம்.

கும்பம் : அவிட்டம் 3, 4ம் பாதம் முதல் சதயம், பூராட்டாதி 1ம் பாதம் வரையிலான கும்ப ராசியினருக்கு

தொழில் வகையில் நன்மைகள் அதிகரிக்கும். தொழில் சுமுகமாக நடைபெறும். லாபம் இருக்கும். கூட்டுத்தொழில் சுமாராகவே நடைபெறும். பணவரவு சீராகும். குடும்பம் மகிழ்ச்சியாகவே இருக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மைகள் ஏற்படும். அப்பாவிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.  மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும். பிற பெண்களால் துன்பம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மீனம் : பூரட்டாதி 2,3,4 ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரையான மீனராசியினருக்கு

இந்த வாரம் சுமாரான வாரம். உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். வேலையில் நாட்டம் குறையும். ஆனாலும் மன தைரியம் அதிகமாகும். வரவை விட செலவுகள் மிக அதிகமாக இருக்கும். சிலருக்கு கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். கதை, கவிதைகள் போன்றவற்றில் ஈடுபாடுகள் அதிகரிக்கும்.  அப்பாவால் நன்மைகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் கவனம் அதிகரிக்கும். நன்றாக படிப்பார்கள் வெற்றி பெறுவார்கள். யாரிடமும் வீண் சச்சரவு வேண்டாம். முருகனை வணங்குவது நன்மை தரும்.

”அறிவியல் ஜோதிட ரத்னா” செந்தில்குமார் M.A.(astro)