அகம் வார இராசி பலன்

110
unique-about-your-zodiac
       

கேது

இந்த வார கிரக நிலை.

 

01.08.16 முதல் 07.08.16 வரை

 

சூரியன்

 

  புதன் குரு

சுக்கிரன் ராகு

 

  செவ்வாய்

சனி

   

சந்திரன்(மாற்றம்)

01.08.16அன்று இரவு 08.17pm மணிக்கு கடகம்

04.08.16அன்று அதிகாலை 02.08am மணிக்கு சிம்மம்
06.08.16அன்று காலை 10.54am மணிக்கு கன்னி

மேஷம் : அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் வரையான மேஷ ராசியினருக்கு

இந்த வாரம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும், சிறப்பாக சிந்தித்து வெற்றி பெறுவீர்கள், பங்கு வர்த்தகம் லாபம் தரும், சிலருக்கு வாகன யோகம் உண்டு, அரசு ஊழியர்களுக்கு உயர்பதவிக்கு வாய்ப்பு உண்டு, பரம்பரை வீட்டை பராமரிக்கவும், மராமத்து பணிகள் செய்யவும் நேரலாம், சகோதரர்களிடம்  சச்சரவை குறைக்கவும், சிறு மனக்குழப்பம் நீடிக்கும், இருந்தும் புத்தி கூர்மையோடு வெற்றிப் பெறுவீர்கள், ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.

ரிஷபம் : கிருத்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம் கொண்ட ரிஷப ராசியினருக்கு

இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். தொழில் நன்றாக நடைபெறும், விவசாயம் மேன்மையடையும், அம்மாவின் ஆதரவு பெருகும், சிலருக்கு அரசு பனி சம்பந்தமாக பயணங்கள் அமையலாம், கூட்டுத் தொழில் லாபம் தரும், கூட்டாளிகளுடன் நல்லுறவு ஏற்படும், உறவினர் வீட்டு விருந்துக்கு செல்வீர்கள், வாகனங்கள் பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம, கல்வியில் நாட்டம் அதிகரிக்கும், அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிவுறும்,

மிதுனம் : மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் வரையான மிதுன ராசியினருக்கு

இந்த வாரம் முகமலர்ச்சியுடன் செயல்படுவீர்கள், இனிமையாகவும், அதிகரமகவும் பேசி  காரியம் சாதித்துக் கொள்வீர்கள், உத்தியோகம் சிறப்பாக  இருக்கும், அண்டை அயலாரால், நண்பர்கலால் நன்மைகள் நடைபெறும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் பக்கத்தில் சுற்றுலா, திருக் கோவில் வழிபாடு போன்றவற்றிற்கு சென்று வரலாம், தகவல் தொடர்பு அதிகரிக்கும், அலைபேசி வழி நற்செய்தி கிட்டக் கூடும், நெருப்பு சம்பந்த பட்ட பொருட்களில் கவனம் தேவை, தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்கவும்,

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம் , பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களை கொண்ட கடகராசியினருக்கு

இந்த வாரம் மிக மகிழ்சிகரமான வாரமாக இருக்கும், வாக்கு வன்மை அதிகரிக்கும், பேச்சால் காரியம் சாதிக்கலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும், செய்தொழில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும், குழந்தைகளால் சந்தோசம் அதிகரிக்கும், திடீர் பணவரவு உண்டு, உல்லாச பயணங்கள் சென்று வருவீர்கள், தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும்,

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் வரையான சிம்ம ராசியினருக்கு

இந்த வாரம் அலைச்சல் அதிகரிக்கும், சமொயோஜிதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள், அந்தஸ்து கௌரவம் அதிகரிக்கும், சிலருக்கு வீடு  வாசல், நிலம் வாங்கும் யோகம் உண்டு, அடிமட்ட உடல் உழைப்பு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெறலாம்,  கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் பிறக்கும், நபர்கள் உதவுவர், சிந்தையில் சலனம் ஏற்படும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம் வரையான கன்னிராசியினருக்கு,

இந்த வாரம் தொழில் நன்றாக நடைபெறும், வெளிநாட்டு தொடர்புடைய தொழில் லாபகரமாக இருக்கும், சிலருக்கு இடமாற்றம் உண்டு, தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய வாய்ப்பு உண்டு, வெளியூர் பயணங்கள் அமையபெறலாம், உடல் உழைப்பு அதிகமாகும், வாகனம் வாங்கும் யோகம் உண்டு, மனைவி வழியில் சிலவுகள் அதிகமாகலாம், வீண் சிலவுகளை குறைக்கவும் .

துலாம் : சித்திரை 3,4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் வரையான துலா ராசியினருக்கு.

இந்த வாரம் தொழில் உத்தியோகம் சிறப்படையும், ஜவுளி தொழில் நன்றாக நடைபெறும், தொழிலில் லாபம் அதிகரிக்கும், பூர்வீக சொத்தில் லாபம் கிடைக்கும், மூத்த சகோதரர் உதவி கிடைக்கும், குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும், பொழுது போக்கில் ஆர்வம் அதிகமாகும், கூட்டுக் குடும்பத்தில் ஒற்றுமையில் கவனம்  செலுத்தவும், ஒற்றுமை சீர்குலைய வாய்ப்பு உண்டு.

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை வரையான விருச்சிக ராசியினருக்கு,

இந்த வாரம் சுமாரான வாரமாக முன்னேறும், சென்ற வாரத்தின் இறுக்கம் குறையும், தரகு கமிசன் வியாபாரம் சிறப்பாக நடைபெறும், உழைப்பால் முன்னேற்றம் உண்டாகும், தொழில் நிமித்தம் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு சிலருக்கு உண்டு, சிலருக்கு வாகன யோகாம் உண்டாகும், பேச்சில் கோபம் அகங்காரத்தை குறைக்கவும் அதனால் பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு, எல்லா விசயங்களிலும் கவனமாக இருக்கவும், குலதெய்வத்தை வழிபடவும். 01.08.16 திங்கள் இரவு வரை சந்திராஷ்டமம் எதையும் சிந்தித்து செயல் பாடவும்.

தனுசு : மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரையான தனுசு ராசியினருக்கு

இந்த வாரமும் வேலையில் கவனம் தேவை, உயர் அதிகாரிகளிடம் திட்டு வாங்க நேரலாம், தொழிலுக்காக சிலவுகள் அதிகரிக்கும், சிலருக்கு வெளிநாடு யோகம் உண்டாக கூடும், பலருக்கு இடமாற்றம் உண்டாகும், மனைவியால் யோகம், அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும், சகோதர்களுக்கு சிலவுகள் செய்ய நேரலாம், குலதெய்வத்தின் அருள் உண்டு. 01.08.16திங்கள் இரவு 08.17pm முதல் 04.08.16அன்று அதிகாலை 02.08amவரை சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை, அடுத்தவர் விசயத்தில் தலையிட வேண்டாம்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 1, 2 வரையான மகரராசியினருக்கு

இந்த வாரம் கூட்டுத்தொழில் சிறப்படையும், இயந்திரம் மூலமான தொழில் மேன்மையடையும், வியாபாரத்தில் கடன் கொடுக்க வேண்டாம், எண்ணியவை எண்ணியபடியே நடைபெறும் நல்லதே எண்ணவும், குழந்தைகளால் மனகஷ்டம், மனைவியுடன் சச்சரவு தவிர்க்கவும், மனம் குழப்பமாகவே இருக்கும், குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும், 04.08.16வியாழன் அதிகாலை 02.08amமுதல் 06.08.16சனி காலை 10.54amவரை சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை, பேச்சில் நிதானம் தேவை.

கும்பம் : அவிட்டம் 3,4ம் பாதம் முதல் சதயம், பூராட்டாதி 1ம் பாதம் வரையிலான கும்ப ராசியினருக்கு,

இந்த வாரம் ஒப்பந்த தொழில் வகையில் நன்மைகள் அதிகரிக்கும், உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளிடம் முரண்பாடுகள் தவிர்க்கவும், எல்லா முயற்சிகளும் எல்லா செயல்களும் வெற்றியடையும், கணவன் மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கும், நண்பர்களால் நன்மை கிடைக்கும், மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், வீண் மனக்குழப்பம் தவிர்க்கவும். 06.08.16சனி காலை 10.54amமுதல் திங்கள் இரவுவரை சந்திராஷ்டமம் செயல்களில் கவனம் தேவை,

மீனம் : பூரட்டாதி 2,3,4 ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரையான மீனராசியினருக்கு

இந்த வாரம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும், போட்டியாளர்களை எளிதில் வெற்றிப் பெறுவீர்கள், குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளவும். வாழ்க்கை துணையுடன் விதண்டவாதத்தை தவர்க்கவும், பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும், தாய்மாமன் வகையில் சச்சரவுவரும், ஆன்மீகத்தில் விருப்பம் அதிகரிக்கும், வெளியூர் பயணங்கள் ஏற்படும்.

– செந்தில்குமார். M.sc., (Astro)