அகம் வார இராசி பலன்

135
unique-about-your-zodiac

 

       

கேது

இந்த வார கிரக நிலை.

 08.08.16 முதல் 14.08.16 வரை.

குரு 11.08.16 சிம்மம்–கன்னி

சூரியன்

 

 

புதன் குரு

சுக்கிரன் ராகு

 

 

செவ்வாய்

சனி

   

கிரகநிலையும், பலன்களும் சுத்த திருக்கணித  பஞ்சாங்க அடிப்படையில் கணிக்கப்பட்டது.

குரு பெயர்ச்சி

11.08.16 இரவு 9.29pm க்கு குரு சிம்ம இராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

சந்திரன்(பெயர்ச்சி – இடமாற்றம்)

08.08.16 அன்று இரவு 10.25pm மணிக்கு கன்னி – துலாம்

11.08.16 அன்று காலை 11.02am மணிக்கு துலாம் – விருச்சிகம்

13.08.16 அன்று இரவு10.20pm மணிக்கு விருச்சிகம் – தனுசு

மேஷம் : அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் வரையான மேஷ ராசியினருக்கு

இந்த வாரம் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் லாபம் அளவாக இருக்கும், கடன் பெற்று வாகனம்வாங்கும் யோகம் உள்ளது, கடனில் சிறிது தீரும், பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும், குடும்பத்தில் கூச்சல் குழப்பம் அதிகரிக்கும், கணவன்/ மனைவி இடையே அன்பு அதிகரிக்கும், வாகனங்களை கவனமுடன் கையாளவும், சிறு மனக்குழப்பம் நீடிக்கும், பிறர் விசயத்தில் தலையிட வேண்டாம், செய்யும் செயல்களில் அதிக கவனம் செலுத்தவும், மாணவர்கள் கல்வியில் கவனம் கொள்ளவும்.

11.08.16 வியாழன் காலை 11.02am முதல் 13.08.16 சனி இரவு 10.20pm வரை சந்திராஷ்டமம் எதிலும் நிதானத்தை கடைபிடிக்கவும்.

ரிஷபம் : கிருத்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம் கொண்ட ரிஷப ராசியினருக்கு

இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சிகரமான வாரம் தொழில் நன்றாக நடைபெறும், உழைப்பால் பல நன்மைகள் கிடைக்கும், லாபம் அதிகரிக்கும், சேமிப்பு உயரும், புதிதாக வீடு, வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு, மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும், சகோதர்கள் உதவுவர், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும், கணவன் மனைவி உறவு சிறப்படையும், வீட்டிற்கு தேவையான விசயங்களில் கவனம்  செலுத்துவீர்கள், பயணத்தால் மகிழ்ச்சி ஏற்படும். அனைவரிடமும் அன்பாகவும், நிதானமாகவும் பேசி புகழ் பெறுவீர்கள்.

13.08.16 சனி இரவு 10.20pm முதல் சந்திராஷ்டமம் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளவும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் வரையான மிதுன ராசியினருக்கு.

இந்த வாரம் தொழில் நன்றாகவே இருக்கும், அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படும், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து விடிவு ஏற்படும், குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர், வெளியூரில் இருந்து இனிய தகவல் ஒன்று கிடைக்கும், சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம், சிலருக்கு மகான்களின் ஆசிகிடைக்கும், தெரியாத நபர்களுக்கு உதவ சென்று பிரச்சனை ஏற்படலாம் கவனம்.

கடகம்: புனர்பூசம் 4ம் பாதம் , பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களை கொண்ட கடகராசியினருக்கு.

இந்த வாரம் மகிழ்சியாக இருக்கும்,உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கப்பெறலாம்,  செயல்களில் ஏற்படும் சிக்கலை அனுபவம் மூலம் வெற்றிக்கொள்ளலாம், சிலருக்கு பூர்விக சொத்து கிடைக்கப்பெறும், உறவினர் வீட்டுக்கு செல்லும் சூழல் ஏற்படலாம், நண்பர்களின் அறிவுரை வெற்றி தரும், உடன்பிறப்புகளிடம் விவாதம் வேண்டாம், வாகனத்தில் செல்லும்போது கவனம் கொள்ளவும்.

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் வரையான சிம்ம ராசியினருக்கு.

இந்த வாரம் சுமாரான வாரமாகவே இருக்கும், வீண் சிலவுகளை குறைக்கவும், வாகன வகையில் சிலவுகள் ஏற்படும், புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாக கூடும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், உணவில் கட்டுப்பாடு தேவை, மனைவி குடும்பத்தில் ஒத்துழைப்பு கொடுப்பார்கள், உறவினர் மத்தியில் மதிப்பு கூடும், வாகனத்தில் செல்லும்போது மெதுவாக செல்லவும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம் வரையான கன்னிராசியினருக்கு.

இந்த வாரம் வியாபாரம் சிறக்கும், மூலதனம் அதிகரிக்கும்நீண்டகாலம் எதிர்பார்த்த பதவிகள் தேடிவரும், தடைபெற்ற செயல்கள் நடைபெறும், மூத்த  சகோதரர் மூலம் மாபெரும்வெற்றி கிடைக்கும், எதிரிகளை வெற்றிக் கொள்வீர்கள், புதியநபர்கள் அறிமுகம் வெற்றியை தேடித்தரும், மனைவியின் அன்பு மனமகிழ்ச்சியை கொடுக்கும், நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், வீட்டு உபயோக பொருட்கள் சேர்க்கை உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

துலாம்: சித்திரை 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் வரையான துலா ராசியினருக்கு.

இந்த வாரம் அரசாங்கத்தால் அனுகூலம் , வியாபாரத்தில் அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கும், உத்தியோகஸ்தர்க்கு நிர்வாகத்திடம் பாராட்டு கிடைக்கும், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், பெற்றோர் மற்றும் பிள்ளைகள் தேவையை பூர்த்தி செய்வீர்கள், பிள்ளைகள் கல்வி சிறக்கும் அதன் மூலம் மகிழ்ச்சி பிறக்கும், மனைவியின் ஆசையை நிறைவேற்றுவீர்கள், உறவுகளிடத்தில் அன்பும் மதிப்பும் கிடைக்கக் கூடும், மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தவும்.

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை வரையான விருச்சிக ராசியினருக்கு.

இந்த வாரம் மனதிலும், உடலிலும் உற்சாகம் அதிகரிக்கும், கூட்டுதொழில் நன்றாக நடைபெறும், தொழிலில் மனைவியின் உதவி கிடைக்கும், லாபம் கணிசமாக உயரும், பணவரவு அதிகரிக்கும், சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு, பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவர், பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறலாம், பெண்களின் சேமிப்பு அதிகரிக்கும், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர், வம்பு, வழக்கு விவகாரங்களில் நிதானமாக பேசவும், அறிமுகம் இல்லாதவரிடம் கவனமாக பழகவும்,

தனுசு : மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரையான தனுசு ராசியினருக்கு.

இந்த வாரமும் தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் முன்னேற்றம் உண்டு, புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகான்பீர்கள், வேலையில் உற்சாகமும், பாராட்டும் கிடைக்கும், சகோதரியால் நன்மை உண்டாகும், மனைவியால் மகிழ்ச்சி பிறக்கும், குடும்பம் சந்தோசமாக இருக்கும், உறவினர் வருகை இருக்கலாம், பெண்கள் சேமிப்பை கடைபிடிப்பர், மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரையை பின்பற்றுவது ஏற்றம் தரும், புதிதாக வீடு, நிலம் வாங்கவாய்ப்பு உண்டு, வாகன வழியில் செலவுகள் ஏற்படும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 1, 2 வரையான மகரராசியினருக்கு.

இந்த வாரம் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும், பணவரவு அதிகமாகும், மனைவியில் குடும்பம் ஏற்றம் பெரும், பிள்ளைகள் சொல்பேச்சு கேட்டு நடந்துக்கொள்வார்கள், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்னியோன்யமும் பிறக்கும், பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள், மாணவர்களுக்கு படிப்பிலும், கதை, கட்டுறை, கவிதை ஓவியம் போன்றவற்றிலும் ஆர்வம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை, பெண்கள் விசயத்தில் ஜாக்கரதையாக நடந்துக்கொள்ளவும்.

கும்பம் : கும்பம் : அவிட்டம் 3,4ம் பாதம் முதல் சதயம், பூராட்டாதி 1,2,3 ம் பாதம் வரையிலான கும்ப ராசியினருக்கு.

இந்த வாரம் எல்லா முயற்சியும் வெற்றியடையும், தொழிலில், வேலைபார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம், ஆனாலும் பணவரவு திருப்தியை தரும், குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும், சிலருக்கு பூர்வீக சொத்து அடிப்படையில் வருமானம் உண்டு, விருந்துகளுக்கு சென்று வருவீர்கள், உடல் ஆரோக்கியம் பெரும், பெண்கள் கணவனிடம் விவாதிக்கமால் இருக்கலாம், மாணவர் படிப்பில் கவனம் செலுத்தவும், தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம்.

08.08.16 திங்கள் கிழமை இரவு 10.25 வரை சந்திராஷ்டமம் கவனம் தேவை.

மீனம் : பூரட்டாதி 4 ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரையான மீனராசியினருக்கு

இந்த வாரம் வேலையில் விரும்பிய வேலை, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும், மனைவியால் நிம்மதி கிடைக்கும், பிள்ளைகளால் பெருமைகள் கிடைக்கும், குடும்பம் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி பிறக்கும், பூர்வீக சொத்தால் லாபம் கிடைக்கும், உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும், அப்பாவின் உடல்நிலையில் கவனம் கொள்ளவும், பெண்கள் ஆன்மீக சுற்றுலா சென்று வருவர், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

08.08.16 திங்கள் கிழமை இரவு 10.25 முதல் 11.08.16 வியாழன் காலை 11.02am வரை சந்திராஷ்டமம் அனைத்து விசயங்களிலும் கவனம் தேவை.

 கணித்தவர் : N. செந்தில்குமார். M.sc., (Astro)