அகம் வார இராசி பலன்

194
unique-about-your-zodiac
       
கேது இந்த வார கிரக நிலை.

 

22.08.16 முதல் 28.08.16 வரை.

சுக் 25.08.16 சிம்மம்–கன்னி

 
  சூரி   குரு

சுக்  ராகு

 

  செவ்

சனி

  புத

கிரகநிலையும், பலன்களும் சுத்த திருக்கணித  பஞ்சாங்க அடிப்படையில் கணிக்கப்பட்டது.

சுக்கிரன் (பெயர்ச்சி – இடமாற்றம்)

25.08.16 வியாழன் அன்று காலை 11.52am  மணிவரை சிம்மம் பிறகு கன்னி

சந்திரன் (பெயர்ச்சி – இடமாற்றம்)

22.08.16  திங்கள்அன்று மாலை 05.00pm மணிவரை மீனம் பிறகு மேஷம்

24.08.16  புதன் அன்று இரவு 07.11pm மணிவரை மேஷம் பிறகு ரிஷபம்
26.08.16  வெள்ளி அன்று இரவு 10.20pm மணிவரை ரிஷபம் பிறகு மிதுனம்.

மேஷம் : அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் வரையான மேஷ ராசியினருக்கு

இந்த வாரம் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும், உத்தியோகத்தில் உடல் உழைப்பு கூடும், தொழிலில் லாபம் அதிகரிக்கும், மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், பொழுதுப்போக்கு எண்ணம் கூடும், கலைகளில் ஆர்வம் செலுத்துவீர்கள், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, நெருப்பு சம்பந்த பட்ட பொருகளை கையாளுவதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

ரிஷபம் : கிருத்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம் கொண்ட ரிஷப ராசியினருக்கு

இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டு, அரசு மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு  உண்டு, கடன் தீரும், தாய்மாமன் ஆதரவு பெருகும், வாகனம் வாங்கும் யோகம் உண்டு, வீட்டை பராமரிக்கும் மராமத்து செய்யும் சூழல் ஏற்படலாம், அனைத்து முயற்சிகளிலும் வெற்றிக் கிட்டும், வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

மிதுனம் : மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் வரையான மிதுன ராசியினருக்கு

இந்த வாரம் சுகமான வாரம், அண்டைஅயலாரின் ஆதரவு கிடைக்கப்பெரும், வெளியூரில் இருந்து நல்லத் தகவல் கிடைக்கும், தகவல் தொடர்பு அதிகரிக்கும், உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம், வெளியூர் செல்லும் சூழல் ஏற்படும், உடல் ஆரோக்கியம் மேன்மையடையும், மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், உடன்பிறப்புகளிடம் கவனம், வீண் சச்சரவை தவிர்க்கவும்.

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம் , பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களை கொண்ட கடகராசியினருக்கு

இந்த வாரம் மகிழ்சியாக இருக்கும், செல்வ சேர்க்கை உண்டு, பரம்பரை சொத்து மூலம் பணம் வரவு உண்டு, உறவினர்கள் உதவி கிடைக்கப்பெரும், பேச்சில் நகைசுவை உணர்வு ததும்பி வழியும், கணவன் மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கும், உல்லாச பயணம் சென்று வர திட்டமிடுவீர், திடீர் அதிர்ஷ்ட யோகம் உண்டு, வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் வரையான சிம்ம ராசியினருக்கு

இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாகவே இருக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்ககூடும், தொழிற்சாலைக்கு  கனரக இயந்திரங்கள் வாங்குவீர்கள், வங்கி சேமிப்பு அதிகரிக்கும், வீடு, நிலம் வாங்கும் யோகம் பலருக்கு உண்டு, மனதில் சந்தோசம் நிலைக்கொள்ளும், மாணவர்கள் படிப்பில் மேன்மையடைவர், சுகதரமான உணவுகளை உண்பது ஜீரனத்திற்கு நல்லது, நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் தவிர்த்தல் நலம்.

22.08.16 திங்கள் மாலை 5.00pm மணிவரை சந்திராஷ்டமம் எல்லா விசயங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம் வரையான கன்னிராசியினருக்கு,

இந்த வாரம் உங்களது புத்திக்கூர்மையால் வெற்றிக்காணலாம், மனதைரியம் அதிகரிக்கும், பொருளாதாரம் சிறப்படையும், உடன்பிறப்புகள் எல்லா விதத்திலும் உதவி புரிவார்கள், வீடு மாறும் சூழல் ஏற்படலாம், வீட்டுக்கு தேவையான ஆடம்பரபொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள், மருத்துவ செலவுகளும் அதிகரிக்கலாம், தேவையற்ற செலவுகளை தவிர்த்தல் நலம்.

22.08.16 திங்கள் மாலை 5.00pm மணிமுதல் 24.08.16 புதன் இரவு 7. 10pm மணிவரை சந்திராஷ்டமம் எல்லா விசயங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

துலாம் : சித்திரை 3,4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் வரையான துலா ராசியினருக்கு.

இந்த வாரம் அனைத்து செயல்களிலும் வெற்றிகான்பீர்கள், எண்ணியவை எளிதில் நிறைவேறும், குடும்பத்தில் செல்வசேர்க்கை அதிகரிக்கும், பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும், தொழிலில் லாபம் அதிகரிக்கும், ஷேர் மார்கெட் பரிவர்த்தனை, முதலீடுகள் பெரிய லாபம் தரும், உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள், குழந்தைகள் வகையில் செலவுகள் ஏற்படலாம்.

24.08.16 புதன் இரவு 7.11pm மணிமுதல் 26.08.16 வெள்ளி இரவு 10.20pm மணிவரை சந்திராஷ்டமம் எல்லா விசயங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை வரையான விருச்சிக ராசியினருக்கு,

இந்த வாரம் எல்லா விசயங்களிலும் வெற்றியே கிடைக்கும், தொழில் சிறப்படையும், வணிகம் மேம்பட்டு புதிய கிளைகள் துவங்குவீர்கள், உத்தியோகஸ்தர்களுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும், வீட்டில் செல்வா சேர்க்கை ஏற்படும், ஆடம்பரப் பொருட்கள், புதிதாய் வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள், உடலில் ஒரு வித மந்த தன்மை ஏற்படும்.

26.08.16 வெள்ளி இரவு 10.21pm மணிமுதல் 29.08.16 திங்கள் அதிகாலை 3.05am மணிவரை சந்திராஷ்டமம் எல்லா விசயங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும்

தனுசு : மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரையான தனுசு ராசியினருக்கு

இந்த வாரமும் சுமாரான வாரமாகவே இருக்கும், பூர்வீக தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு, வங்கி மற்றும் நிதிநிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெரும், மாணவர்களுக்கு உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும், உறவினர் உதவிகள் கிடைக்கப்பெறும், சகோதர வழியில் சிலவுகள் ஏற்படும், அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சிக்கலில் இருந்து விடுபட குலதெய்வத்தை வழிபடவும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 1, 2 வரையான மகரராசியினருக்கு

இந்த வாரம் எல்லா செயல்களும் சிறப்பாகவே நடைபெறும், புதிதாய் நிலம் வாங்க உகந்த நேரம், குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும், குலதெய்வ கோவிலுக்கு செல்லுவீர்கள், அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கவனம் தேவை, யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாட்டை தவிர்க்கவும் வீண் சச்சரவு உருவாகும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை..

கும்பம் : அவிட்டம் 3,4ம் பாதம் முதல் சதயம், பூராட்டாதி 1,2,3 ம் பாதம் வரையிலான கும்ப ராசியினருக்கு,

இந்த வாரம் யோகமான வாரம், அரசுடன் செய்த ஒப்பந்த தொழில் லாபம் கொடுக்கும், ஆசிரியர் தொழில் செய்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும், தொழில் உத்தியோகம் சிறப்படையும், எதிர்பாராத அதிர்ஷ்டம் இருக்கும், கணவன் மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கும், கடவுள் பக்தி அதிகரிக்கும், அடிக்கடி பிரயாணம் நிகழும்.

மீனம் : பூரட்டாதி 4 ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரையான மீனராசியினருக்கு

இந்த வாரம் கடவுள் வழிபாட்டால் நன்மை பயக்கும், முக வசீகரம் கூடும், அதிர்ஷ்டம் அதிகரிக்கும், மனதைரியம் அதிகரிக்கும், அந்த அளவிற்கு சிலவுகள் அதிகரிக்கும், பொன்நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், தாய்மாமன் வகையறாக்களிடம் சச்சரவை தவிர்க்கவும், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

 

கணித்தவர் N. செந்தில்குமார். M.sc., (Astro)